பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் வெளியிட்டுள்ள தகவலை வரவேற்று, முக்கிய வேண்டுகோள் ஒன்றை தன்னுடைய, அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதுகுறித்து இவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது...  

கொரோனாவால், பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளும் கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களின், நல திட்டத்திற்காக 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை தொகுப்பினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று அறிவித்தார்.

நடிகர் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட சந்தானம்! நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்..!

அதைத்தொடர்ந்து பொருளாதார பாதிப்பை சீர் செய்ய 4 அம்ச திட்டமாக, போதுமான நிதி சந்தையில் இருப்பதை உறுதி செய்தல், வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ஏற்பாடு. கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள நெருக்கடியை குறைத்தல், சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க நடவடிக்கை, என வங்கியின் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை பாராட்டி வரவேற்கிறேன்.

குறிப்பாக வங்கிகளிடம் தனிநபர்கள் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடனுக்கான மாதத் தவணை செலுத்த 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கிடவும், குறுகிய கால கடனுக்கான வட்டி ௦. 75% ரெப்போ வட்டி விகிதம் 5.15 விழுக்காட்டிலிருந்து 4.4 விழுக்காடாக குறைக்க வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

இதயத்தை உடைய வைக்கும் சேதுராமனின் இறுதி அஞ்சலி புகைப்படங்கள்!கொரோனாவால் யாரும் வர முடியாத சோகம்!

அதேசமயம் பாதிப்பு நிலை சீரான பின்பு, மூன்று மாத தவணை தொகையை திருப்பி செலுத்துவதில் உள்ள சிரமத்தை கருதி மூன்று மாத தவணை தொகையை மீண்டும் ஒரு வருடமோ இரண்டு வருடமோ கழித்து அறிவித்தல் பிரித்து அந்த தொகையையும் இஎம்ஐ ஆக மாற்றி திரும்பப் பெற்றுக்கொள்ள பரிசீலித்து வங்கிகளுக்கும் அறிவுறுத்த மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன் என நடிகர் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார். இவரின் இந்த யோசனை எந்த அளவிற்கு சாத்தியமாக்கப்படும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.