இயக்குநர் சங்கர்  தயாரிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியான 'ஈரம்  படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆதி. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றாலும், அடுத்தடுத்து அவருக்கு நல்ல படங்கள் எதுவும் அமையவில்லை.

இந்நிலையில் தான் ஆதியின் நடிப்புக்கு புகழ் சேர்க்கும் வகையில் உருவான புதிய தமிழ் திரைப்படம் 'யாகாவராயினும் நா காக்க'. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் சத்யா பிரபாஸ்  இயக்கியிருந்தார்.

முழுமையான ஆக்சன் திரில்லர் திரைப்படமான இதில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி முதன்முறையாக நடித்திருந்தார். ஆதி மற்றும் மிதுன் சக்ரவர்த்தியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சித்தார்த்.

அவர் மதுரவாயில் பகுதியில் உள்ள வீட்டில் தன்னுடைய மனைவி ஸ்மிரிஜாவுடன் வாழ்ந்து வந்தார். ஸ்மிரிஜா , சித்தார்த்தைவிட 3 வயது மூத்தவர். இந்நிலையில் இன்று ஸ்மிரிஜா திடீரென வீட்டில் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மதுரவாயில் போலிசார் உடனடியாக அங்கு சென்று ஸ்மிரிஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.