துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவின் போது பெரியார் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ முடியாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்தார். ரஜினியின் இந்த துணிச்சலான பேச்சு, கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ரஜினி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் சில அரசியல் கட்சிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. எப்படியாவது ரஜினியை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலசலப்பிற்கு எல்லாம் ரஜினி அச்சியதாக தெரியவில்லை. 

இந்நிலையில் ரஜினிகாந்திற்கு ஆதரவாக சில அரசியல் கட்சி தலைவர்களும், இந்து அமைப்பினரும், அவரது தீவிர ரசிகர்களும் மட்டுமே குரல் கொடுத்த வந்த நிலையில், திரைத்துறையினரும் இப்போது ரஜினி பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். குஷ்பூ, மீரா மிதுன், ரோபோ சங்கர் என பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு ஆதரவாக பகிரங்கமாக ட்வீட் செய்துள்ளனர். இதனால் திரைத்துறையினர் மத்தியில் ரஜினிக்கு இந்த இமேஜ் பல மடங்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. 

இதையும் படிங்க: பெரியாரின் யோக்கிதையை சொன்னா ஏன் சில பேருக்கு எரியுது?... ரஜினிக்காக வரிந்து கட்டும் பிரபல நடிகர்..!

டுவிட்டரில் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஹேஷ்டேக்குகளும், கமெண்ட்களும் அனல் பறக்கின்றன. இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பேரரசு ரஜினிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அதில் பெரியாரைப் பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமானால்... இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: விஜய் காஸ்ட்யூமில் சூப்பர் ஸ்டார்... "தர்பார்" படம் பற்றி தீயாய் பரவும் மீம்ஸ்... ரஜினியை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

இந்த டுவிட்டர் பதிவை பார்த்த பலரும் பேரரசுவிற்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ள நிலையில், சிலர் ஏன் ஏதாவது ஊர் பெயர்ல சூப்பர் ஸ்டாருக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி இருக்கீங்களா?... ரஜினி சார் நீங்க மன்னிப்பு கேட்க கூட வேண்டாம், இவரு படத்தில மட்டும் நடிச்சுறாதீங்க என சைக்கிள் கேப்பில் அவரை கலாய்த்துள்ளனர்.