சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ,எந்திரன் படத்தின் இரண்டாவது பாகத்தில் செம பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான இவர் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட இவருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர்

நாகேஷ்வர ராவ் கெய்க்வாட் மற்றும் சத்யநாரயண ராவ் கெய்க்வாட், இந்த இருவரில், சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் மனைவி தனது 72வது வயதில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

இதனை ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில்” நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாரயணன் அவர்களின் துணைவியார் S .கலாவதி சத்யநாராயணன் (வயது 72) அவர்கள் நேற்று இரவு 11மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.

இவரது ஆத்ம ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .”என ரியாஸ் அகமத் தெரிவித்திருக்கிறார்.இதனால் ரஜினிகாந்தின் சகோதரரின் மனைவி , கலாவதிக்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.