இந்தியாவில் தற்போது  #MeToo இயக்கம் மிகத் தீவிரமாகிவிட்டது. இப்போது டிவீட்டரில் மேய்ந்து பார்த்தால் பாதிக்குப் பாதியான குற்றச்சாட்டுக்கள் மீடியா மற்றும் சினிமா துறையில் இருக்கும் ஆண்கள் மீதே பாய்ந்திருக்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைளில் பணியாற்றும் நிர்வாக ஆசிரியர்கள் லெவலுக்கு குற்றச்சாட்டுக்கள் பெரிய அளவில் இருக்கின்றன. இது போன்று தற்போது கவிஞூர் வைரமுத்து மீதும் ஒரு புகார் கிளம்பி புயலை கிளப்பியது.

தமிழ் திரையுலகைப் பொருத்தவரை கவிஞர் என்றால் இது வைரமுத்துதான். சூப்பர் ஸ்டார்களான ரஜினி , கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் எல்லாத் தங்களது படங்களுக்கு பாடல் எழுத வைரமுத்துவைத்தான் நாடுவார்கள். கலையோடு, கவி தன்மையோடும் அவர் பேசும் வார்த்தைகளே அவ்வளவு அழகு என்றால் பாடல்கள் பற்றி கூறவா வேண்டும். 

இந்நிலையில்தான் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் வைரமுத்து மீது செக்ஸ் புகார் ஒன்றை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனக்கு  வைரமுத்து  மீதும் அவருடைய எழுத்தின்மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்ததாகவும், ஆனால் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அந்த டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார். 

அந்த டுவீட்டை அவர் சில நிமிடங்களில் டெலிட் செய்துவிட்டாலும் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தவர்கள் அதை வைரலாக்கி வருவதால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது.

மேலும் இந்த டுவீட்டை பாடகி சின்மயி ரீடுவீட் செய்துள்ளார். இந்த தகவலை ஒருசிலர் நம்பவில்லை எனினும் இது நடந்தது உண்மை என சின்மயி தெரிவித்துள்ளார்.

தற்போது, அவரை தொடர்ந்து ஒரு பெண் பிரபலம், நடிகர் ராதா ரவியால் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பதிவு செய்துள்ளார். அதனை சின்மயி தனது டுவிட்டரிலும் ஷேர் செய்திருக்கிறார். இந்த தகவல் கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.