விஜய்யின் அரசியல் ஆசை:

நடிகர் விஜய்க்கு நீண்ட காலமாக அரசியல் ஆசை உண்டு என்பது போல் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், நேரடியான அரசியலில் இறங்க விஜய்க்கு சற்று தயக்கம் இருப்பதால், காலம் தள்ளிக் கொண்டே போகிறார்.

இவர் அரசியல் பயணம் குறித்து யோசித்து வரும் நிலையில், நடிகர்கள் கமலும், அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினியும் அரசியலில் கால் வைத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

அரசியல் ஆர்வம்:

இருப்பினும் அரசியல் ஆர்வம் விஜய்க்கு கூடுதலாக இருப்பதை நிரூபிக்கும் விதத்தில் நடிப்பிலும் சமூக அக்கறை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தன்னுடைய அரசியல் ஆசையை விஜய் வெளிக்காட்ட வில்லை என்றாலும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்பது போல் பல முறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்கார்:

இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிகர் ராதாரவி இவருடன் நடித்துவருகிறார்.

விஜயுடன் சர்க்கார் படத்தில் நடிப்பது பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ள ராதாரவி. விஜய் இன்னும் ஐந்து அல்லது ஆறு வருடத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என கூறியுள்ளார். 

மேலும் "ஜெயலலிதா இருந்தபோதே தைரியமாக பல விஷயங்களை செய்தவர். அதனால் தான் அவரிடம் எதிர்ப்பை சம்பாதித்தார். தற்போது அவர் இல்லாதபோது நான் வருவேன் என கிளம்பி வரவில்லை." என்று புகழ்ந்துள்ளார்.

புரட்சித்தலைவர்:

விஜய் அரசியலில் இறங்கினால், புரட்சித்தலைவரை போல், வருவார். அதற்காக அவரிடம் இருக்கும் சில குணங்களை நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் "திரையுலகை நீங்கள் ஆள்வது போல தமிழ்நாட்டையும் ஆள்வீர்கள் விஜய்" என ராதாரவி நம்பிக்கையாக கூறியுள்ளார்.