Asianet News TamilAsianet News Tamil

பிறந்த நாள் அதுவுமா பிரகாஷ்ராஜ் செய்த காரியம்... நம்மளையும் ட்ரை பண்ண சொல்லியிருக்காரு...!

இந்நிலையில் தனது 55வது பிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடி, சமூக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். 

Actor Prakash Raj Arrange  Shelter For 11 Homeless People on His Birthday
Author
Chennai, First Published Mar 26, 2020, 3:59 PM IST

“ஹாய் செல்லம்” இந்த வார்த்தையை கேட்டாலே நம்ம கண் முன்னடி வந்து நிற்கும் முதல் உருவம் நடிகர் பிரகாஷ் ராஜ். பெங்களூருவைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ் இயக்குநர் சிகரம் பாலச்சந்திரன் “டூயட்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு,  இந்தி ஆகிய மொழிகளில் பிரபல வில்லன் நடிகராக அசத்தி வருகிறார். 

Actor Prakash Raj Arrange  Shelter For 11 Homeless People on His Birthday

இந்தியா முழுவதும் சிறந்த நடிகராக கவரப்பட்ட பிரகாஷ் ராஜ் சிறந்த மனிதர் என்பதையும் அடிக்கடி நிரூபித்து வருகிறார். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறையில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 

Actor Prakash Raj Arrange  Shelter For 11 Homeless People on His Birthday

அதனால் வேலை இழந்து தவிக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் படி அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டிருந்தார். அதற்கு உதவும் விதமாக பெப்சி ஊழியர்களுக்கு தலா 25 கிலோ வீதம் 150 அரிசி மூட்டைகளை வழங்கினார். 

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

இந்நிலையில் தனது 55வது பிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடி, சமூக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீடு இன்றி தவிக்கும் 11 பேருக்கு பாண்டிச்சேரியில் உள்ள தனது தோட்டத்தில் தங்க இடவசதி ஏற்படுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: ப்பா என்னா இடுப்பு... ரம்யா பாண்டியனுக்கே டப் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்...அந்த இடம் தெரிய பளீச் போஸ்...!

இதனை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், இதுபோன்ற கஷ்ட காலங்களில் அரசு தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் உங்களால் முடிந்த சிறிய உதவிகளை பிறருக்கு உதவி செய்யுங்கள். இது நம் அனைவரது கடமை. ஒவ்வொரு பிரபலங்களும் இதுபோன்று வீடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவலாமே என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios