Asianet News TamilAsianet News Tamil

இப்ப இது ரொம்ப முக்கியமா..? அபிநந்தனின் நாட்டு பற்றை பார்க்காமல் சாதி முலாம் பூசிய நடிகை கஸ்தூரி..!

தமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அபிநந்தன் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டு கஸ்தூரி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.

actor Kasturi tweets
Author
Tamil Nadu, First Published Feb 28, 2019, 12:26 PM IST

தமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அபிநந்தன் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டு கஸ்தூரி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.

புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் இந்திய விமானப்படையினரால் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். actor Kasturi tweets

அதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதில் ஒரு இந்திய விமானியை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப்பிடித்துள்ளதாக வீடியோ ஒன்றை பதிவிட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவலும் வெளியானது. இவரை உயிருடன் பத்திரமாக மீட்கவேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. 

 

இந்நிலையில் இது பற்றி பேசியுள்ள நடிகை கஸ்தூரி "அவர் ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்தவர்" என ட்விட்டரில் பதிவிட்டார். இந்த சூழ்நிலையில் வீரரின் ஜாதி குறித்து பேசுவது சரிதான என பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மற்றொரு ட்விட்டையும் பதிவிட்டிருந்தார்.

 

 

" ராணுவத்தில் ரத்தம் சிந்தியவன் யாரும் ப்ராஹ்மணன் இல்லை என்று கணக்கெடுக்கும் நன்றிகெட்ட திராவிட சொம்புக்களுக்கு என் பதிவு கசக்கத்தான் செய்யும்" என அவர் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios