Asianet News TamilAsianet News Tamil

அவசர அவசரமாக ஆட்டோவில் வந்து இறங்கிய நடிகர் கார்த்தி..!

actor karthi travelled in auto in hydrabad
actor karthi travelled in auto in hydrabad
Author
First Published Jul 17, 2018, 1:33 PM IST


அவசர அவசரமாக ஆட்டோவில் வந்து இறங்கிய நடிகர் கார்த்திக்..!

நடிகர் சிவகுமாரின் மகனான கார்த்திக், தற்போது தமிழ் சினிமாவில்  அடுத்தக்கட்ட இலக்கை எட்டி உள்ளார் என்றே கூறலாம்..

தன் வீட்டில் எப்படி கடைக்குட்டி சிங்கமோ..அதே போல படத்திற்கும் கடை குட்டி சிங்கம் என்றே பெயர் வைக்கப்பட்டு உள்ளது.முழுக்க  முழுக்க விவசாயம் சார்ந்த இந்த படம் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூடி உள்ளது...

நடிகர் சூர்யாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் தமிழில் வெற்றி நடை போட்டதை தொடர்ந்து தெலுங்கிலும் இந்த படம் சின்ன பாபு என்ற பெயரில் தயாராகி,மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

இந்நிலையில், இதற்கான வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொள்வதற்காக நடிகர் கார்த்திக்கும் ஹைதராபாத் சென்று இருந்தார்.அப்போது அவருடைய கார் மழையின்  காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் சரியான நேரத்திற்கு விழாவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அருகில் இருந்த ஆட்டோவை பிடித்து, விழாவில் கலந்துக்கொள்ள வேகமாக சென்று சரியான நேரத்தில் வாசலில்  இறங்கினார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்னதாக நடிகர் கார்த்திக், கடை குட்டி சிங்கம் படத்திற்கு  கிடைத்த வெற்றிக்கு மனதார நன்றியை தெரிவித்து வீடியோ  வெளியிட்டு உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios