கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் இதன் தீவிம் பற்றி மக்கள் பலர் புரிந்து கொள்ளாமல் உள்ளனர் என, மருத்துவர்கள் மற்றும் பல பத்திரிகைகளிலும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, தமிழகத்தில் மேலும் 17 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதன் மூலம் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 67 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவி வருவதை தடுக்கும் விதமாக தன்னை தானே, கடந்த இரண்டு வாரமாக தனிமை படுத்திக்கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசன் அவ்வப்போது கொரோனா பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும், தொண்டர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நச் என ஒரு கேள்வியை கேட்டுள்ளார் கமல். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்... "போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தை, நெட்டிசன்கள் பலர் வரவேற்று வருகிறார்கள்.