தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்தாலும் குடும்பத்தினருக்காக அதிகம் நேரம் ஒதுக்குபவர் நடிகர் தனுஷ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் ஆகிய படங்களை நடித்து முடித்த தனுஷ், அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

அடுத்தடுத்து பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் ஷூட்டிங் இல்லாத நாட்களை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். தனுஷுக்கு அண்ணன் செல்வராகவனை தவிர இரண்டு சகோதரிகள் உள்ளனர். தற்போது ஷூட்டிங் ஏதும் இல்லாத இந்த சமயத்தை பயன்படுத்தி கொண்ட தனுஷ், குடும்பத்துடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். 

அங்கு சகோதரி மகள் ஒருவருக்கு தாய் மாமன் என்ற முறையில் தனுஷுன் மடியில் உட்கார வைத்து மொட்டை அடித்துள்ளனர். அப்போது குழந்தைக்கு தாய் மாமன் தனுஷ் முதல் முடி எடுத்துள்ளார், அவரது அருகில் இயக்குநர் செல்வராகவன் அமர்ந்திருக்கிறார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் புகைப்படங்கள் இதோ...