*விஜய், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என்று செம்ம ஹீரோக்களை வைத்துப் படம்  பண்ணியவர் ஜெயம் மோகன் ராஜா. வேலைக்காரன்! எனும் டல் படத்துக்குப் பின் அவரை ஆளே காணவில்லை. ‘தனியொருவன் 2! தயார் செய்கிறார்’ என்று பேசப்பட்ட நிலையில், மனுஷன் இப்போது பழைய பட்டாஸ் ஹீரோ பிரசாந்தை வைத்து  ஒரு ரீமேக் படம் இயக்குகிறார். ‘அந்தாதூன்’ எனும் இந்திப்படம் தேசிய விருது பெற்றது. இதை பிரசாந்தின் அப்பா தமிழுக்கு கொண்டு வந்து தயாரிக்கிறார், பிரசாந்த் நடிக்க, மோகன் ராஜா இயக்குகிறார். (இந்தப் படம் பிரசாந்துக்கு ரீ எண்ட்ரி தருகிறதோ இல்லையோ, மோகன் ராஜாவுக்கு தரட்டும்) 

*எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், எக்குதப்பான செல்ஃபி போட்டோக்களை அப்லோடிடுவது, எகிடுதகிடான கதைகளில் நடிப்பது! எனும் கொள்கைகளை அமலாபால் விட்டுக் கொடுப்பதே இல்லை. இப்போது அவரது ‘அதோ அந்த பறவை போல’ படம் ரிலீஸாக இருக்கும் நிலையில், ‘ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய ஹீரோயின்கள் இருக்கிறாங்க. நான் வேற மாதிரி’ என்று சொல்லியிருக்கிறார். (என்ன மாதிரின்னு சொல்லிடுடீ மைனா!)

*மலையாள நடிகைகள் எப்பவுமே தைரியமான சேச்சிகள்தான் அதிலும் பூ பார்வதி இருக்கிறாரே செம்ம தைரியமான பொண்ணு. எந்தளவுக்கு? என்றால், சொந்த மாநில சினிமா துறையில்  ஹீரோக்களின் கண்களில் விரல் விட்டு ஆட்டுமளவுக்கு. இந்த கெத்து பொண்ணு, நடிச்சாலே அதிரும். இந்த நிலையில் இயக்குநர் அவதாரமெடுக்கிறார். அரசியல், த்ரில்லர் என ரெண்டு கதைகள். (ஆல் தி பெஸ்ட் சேச்சி!)

*’நாங்களும் எத்தனை நாளைக்குதான் ஹீரோவோட லவ்வுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்குது. எங்களுக்கு ஊட்டி, சிம்லா போயி டூயட் பாட ஆசை இருக்கும்ல!’ என்று தான் ஹீரோ ஆவதை தன் பட டயலாக்கின் மூலமே உணர்த்தியவர் சந்தானம். காமெடி ஹீரோவாக ஓரளவு ஜெயித்தார். ஆனாலும் பெரிய வரவேற்பில்லை. இந்நிலையில், சமீபத்தில் தனக்கு ஓரளவு ஹிட் கொடுத்த ‘ஏ1’ பட இயக்குநர் ஜான்சனுடன் அடுத்த படத்துக்கு பூஜை போட்டுள்ளார். 
(குல்ஃபி ஐஸுன்னு நினைச்சு குச்சியை நக்கிக்காதீங்க குமாரு)

*ரஜினிகாந்துக்கு நவரசமாக நடிக்கவும் தெரியும் என நிரூபித்த படங்களில் ஒன்று ‘நெற்றிக்கண்’. டபுள் ஆக்‌ஷன் பண்ணியிருப்பார். அதில் ஜொள்ளு அப்பாவாக அவர் அதகளம் பண்ணிய கேரக்டர் இன்னைக்கும் நின்னு பேசுது. இப்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகுது. அதில் நடிக்க இருப்பவர் தனுஷ், ஜோடி?....முதல் பாகத்தில்  மகன் ரஜினியின் ஜோடியாக நடித்த மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். 
(இது எப்டியிருக்கு?)