Asianet News TamilAsianet News Tamil

அஜீத் படத்துல நடிக்கிறதுக்காக எப்பிடியெல்லாம் ஆள் செட் பண்றாருங்க இவரு!

'தல’ அஜித் படத்தில் ஒரு சிறு வேடத்திலாவது நடித்துவிடத் துடிக்கிறேன். அந்த வாய்ப்பு வராதா என்று ஏங்கிக் காத்திருக்கிறேன்’ என்று ட்விட்டர் மூலம் அஜித் படத்தில் வாய்ப்பு வலை வீசுகிறார் நடிகர் ஆதி.
 

actor athi try to acting ajith moive
Author
Chennai, First Published Oct 8, 2018, 4:12 PM IST

'தல’ அஜித் படத்தில் ஒரு சிறு வேடத்திலாவது நடித்துவிடத் துடிக்கிறேன். அந்த வாய்ப்பு வராதா என்று ஏங்கிக் காத்திருக்கிறேன்’ என்று ட்விட்டர் மூலம் அஜித் படத்தில் வாய்ப்பு வலை வீசுகிறார் நடிகர் ஆதி.

‘மிருகம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி அடுத்து ‘ஈரம்’ படம் படம் ஓரளவு பேசப்பட்டு, பின்னர் சொல்லிக்கொள்ளும்படி படம் இல்லாமல் அடங்கிப்போனவர் ஆதி. 

actor athi try to acting ajith moive

சமீபத்தில் வெளியான சமந்தாவின் ‘யு டர்ன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தலைகாட்டியிருந்த ஆதி, ட்விட்டர் மூலம் நீண்ட நாட்களாகவே  அஜித் படத்தில் வாய்ப்பு பிடிக்க ஒரு டெக்னிக்கை கையாண்டு வருகிறார்.

அதாவது வேண்டிய நண்பர் மூலம் ‘ஆதி சார் நீங்க அஜித் படத்துல வில்லனா நடிச்சா சூப்பரா இருக்கும்’ என்று வேண்டுகோள் வைக்கவைப்பது, உடனே அதற்கு பதில் சொல்லும் சாக்கில் ‘தல அஜித்னா எனக்கு உயிர். அவர் படத்துல ஒரு சின்ன சீன்லயாவது தல’காட்டமாட்டோமாங்குறது என்னோட நீண்ட நாள் ஏக்கம் என்று ஆதி பதில் சொல்வது என்பது பல காலமாக நடந்துவருகிறது.

actor athi try to acting ajith moive

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆதியில் இந்த ட்விட்டர் டெக்னிக், அஜித்துக்கோ,அவரை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களுக்கோ போய்ச்சேரவில்லை.

இந்த ஆதிகால டெக்னிக்கை கைவிட்டுவிட்டு கொஞ்சம் மாடர்னாக ட்ரை பண்ணுங்களேன் தம்பி.

Follow Us:
Download App:
  • android
  • ios