‘ஜல்லிக்கட்டு, கஜா புயல் விவகாரங்களில் மக்களிடம் பணம் வசூலித்து அதை சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொண்டேன் என்று என் மனைவி அதிதி மோசடிப்பட்டம் சுமத்தினாலும், அதையும் தாங்கிக்கொண்டு சமூகப் பணிகளில் ஈடுபட்டே தீருவேன்’ என்று அடம்பிடிக்கிறார் நடிகர் அபி சரவணன்.

தனது மனைவியும் நடிகையுமான அதிதி மேனன் அபி சரவணன் குறித்து தொடர்ந்து அவதூறுகள் கூறி, தங்களது திருமணச் செய்திகளையும் மறுத்துவரும் நிலையில் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில், மனைவியின் கிளாமரான படம் ஒன்றை வெளியிட்டு, பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார் அபி சரவணன்.

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...

சில தினங்களாக செய்திகளில் எனக்கும் #adhitimenon #அதீதிமேனன் இடையான திருமணம் குறித்து பலவிதமான செய்திகள் வெளிவந்துள்ளது... எனக்கும் எனது மனைவிக்குமான குடும்ப தகராறு வெளியே தெரிய வேண்டாம் என எண்ணி கடந்த நான்கு மாதமாக எனது படப்பிடிப்பில் கவனம் செலுத்திகொண்டே அவரது பெற்றோர் நண்பர்கள் மூலம் சமாதானமாக பேச எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை...இது குறித்து மதுரை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளேன்.

இது ஒருதனிநபரின். குடும்ப பிரச்சினை...எனது மனைவி பதிவுதிருமணமே செல்லாது எனவும்அது போலி சான்றிதழ் என கமிஷனர் அலுவலத்தின் முன் மீடியாவில் தெரிவித்ததால் வேறுவழியின்றி மீடியாவில் ஆதாரங்களை வெளியிட வேண்டிய சூழ்நிலை... ஆனால்எனது மனைவி அதீதி என்ற பிரபல நடிகையின் இமேஜ் கெடுக்கவோ அல்லது அவருடைய பட வாய்ப்புகளை கெடுக்கவோ விரும்பவில்லை...

இது எனது மனைவிக்கும் எனக்குமான குடும்ப விவகாரம். மேலும்என்னுடன் திருமணமானலும் வேறு ஒருவருடன் அவர் வாழ விரும்பினால் அது அவரது விருப்பம். பொதுவெளியில் சமூகவலைதளங்களில் விவாதம் செய்ய விரும்பவில்லை எனவே சட்டப்படி நீதிமன்றம் மூலம் சமரசதீர்வு காண விரும்புகிறேன்...

ஆனால் என்மேல் அவரது குற்றச்சாட்டான $சல்லிக்கட்டு.. #விவசாயிகள் போராட்டம் #கஜா மற்றம் #கேரளவெள்ள நிவாரணம் போன்றவன்றில் முறைகேடாக பணம் சேர்த்ததாகவும் ,அதன் மூலம் வீடு கார் வாங்கியதாவும் புகார் தெரிவித்திருந்தார். யாரோ சிலர் எனது மனைவியை மூளைச்சலவை செய்து அவர் மூலம் எனது சமூகப்பணியை கொச்சைபடுத்தி என்னை காயப்படுத்தி அளவுக்கதிகமான மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார்கள்.

இருப்பினும் என்மேல் கூறிய குற்றச்சாட்டுகள் பொய் என விரைவில் ஆதாரங்களுடன் நிருபித்துவிட்டு எனது சமூகப்பணியை என்றும் தொடருவேன்...எனது கடந்தகாலம் என்பது கசப்பான அனுபவமே.... நண்பர்களின் ஆதரவை உணர்கிறேன்.ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்...என்று பதிவிட்டிருக்கிறார் அபி சரவணன்.