Asianet News TamilAsianet News Tamil

விஸ்வரூபம் எடுக்கும் தடவல் மேட்டர்... அதிரடியில் இறங்கிய நடிகர் சங்கம்!!

மூத்த கலைஞர்களை கொச்சைப்படுத்துவதும் அவமதிப்பதும் தவறு. நீங்கள் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கஸ்தூரிக்கு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளது. 

Actior association against actress  kashthuri
Author
Chennai, First Published Apr 12, 2019, 12:54 PM IST

மூத்த கலைஞர்களை கொச்சைப்படுத்துவதும் அவமதிப்பதும் தவறு. நீங்கள் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கஸ்தூரிக்கு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி இரவு நடைபெற்றது. அப்போது எளிய இலக்கை மிக அதிகமான பந்துகளை எதிர்கொண்டு ஆடி வெற்றி பெற்றது சென்னை அணி.

இது குறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க" என்று பதிவிட்டார். இதனால் கஸ்தூரிக்குக் கடும் எதிர்ப்பு உருவானதால் அந்த ட்விட்டை நீக்கிவிட்டார்.

தொடர்ந்து எதிர்ப்பு வர இதற்கு விளக்கம் அளித்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது?இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், மனமார வருந்துகிறேன்" என்பதாக பதிவிட்டிருந்தார்.

Actior association against actress  kashthuri

எம்.ஜி.ஆர். லதாவை தடவியதிலும் தவறு இல்லை, அதை நான் மேற்கோள் காட்டியதிலும் தவறு இல்லை. இருப்பினும் இது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மனமார வருந்துகிறேன் என்று கஸ்தூரி ஏற்கனவே ட்வீட் செய்துவிட்டார். 

இந்நிலையில் நடிகை லதா குறித்து கஸ்தூரிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்; 50 வருஷமா நான் நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘ எம்.ஜி.ஆரை தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டுமொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் ட்வீட் போடலாமா?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே... அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே? எதுக்கு நானும், மக்கள் திலகமும் நடிச்ச படத்தைச் சொல்லணும்... கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி.. என கூறியிருந்தார்.

Actior association against actress  kashthuri

எம்.ஜி.ஆர்., லதா பற்றிய ட்வீட் குறித்து நடிகர் சங்கம் கஸ்தூரிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தில், மூத்த கலைஞர்களை கொச்சைப்படுத்துவதும் அவமதிப்பதும் தவறு. நீங்கள் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இனி வரும் எதிர்காலத்தில் மூத்த கலைஞர்கள் வருத்தப்படும்படி எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios