Asianet News TamilAsianet News Tamil

நடிக்கப்போய் சறுக்கினாரா..? ’ஷாட்கட்டில்’ முடிந்த சேதுராமனின் வாழ்க்கை... சினிமாவை மிஞ்சும் பரபர தகவல்கள்..!

வேலையை உதறிவிட்டு கணவரின் க்ளினிக்கை கவனிக்கிறார். சேது - உமா தம்பதியின் ஒரே ஒரு செல்லமகள் சஹானா. இப்போது அப்பா சேதுவை தேடி அழுது கொண்டிருக்கிறார் சஹானா...!

Acting and skating ..? Sethuraman's life ...
Author
Tamil Nadu, First Published Mar 28, 2020, 11:58 AM IST

சந்தானத்தை ஒரு ஹீரோவாக உயர்த்திய ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் அறிமுகமானவர் சேது. அதனையடுத்து ‘வாலிப ராஜா’வில் ஹீரோவானார். தொடர்ந்து ‘சக்கபோடு போடுராஜா’, ‘50/50’ல் நடிகராகவும் கலக்கினார். சின்ன இடைவெளிக்கு பின்,  வெப்சீரீஸிலும் ஜொலிக்க தயாரானவர் ஹார்ட் அட்டாக்கால் இறந்து விட்டார்.

சந்தானத்தின் அபரிதமான அன்பை அள்ளிய சேது, சருமநோய் நிபுணர். போயஸ்கார்டன், அண்ணாநகர், ஈ.சி.ஆர் என சென்னையின் டாப் பகுதிகளில் ‘zi’ skin, hair, laser clinicகை நடத்தி வந்தவர். ‘ஒரே நேரத்தில் இரண்டு கேரியரில் ஜெயிக்க முடியும்’ என்பதை வலியுறுத்தி பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கையூட்டி உரை நிகழ்த்தி வந்தார்.Acting and skating ..? Sethuraman's life ...

‘‘சினிமால ஒரு படம் ஆரம்பிக்கறதுல இருந்து ரிலீஸுக்கு முன்னாடி டீசர், போஸ்டர் ஒட்டும் வரை என்னவெல்லாம் செய்யலாம்னு கிரியேட்டிவ்வா யோசிப்பாங்களோ அப்படி என் ஆபீசையும் கிரியேடிவ்வா வடிவமைச்சிருக்கேன். என் கிளினிக் பெயரான ‘zi’ங்கறது கூட சைனீஷ் வார்த்தைதான். அதுக்கு greetful, something beyondனு அர்த்தம். வெளிநாடுகள்ல டாப் டாக்டர்ஸ் பலரும் ஒரே நேரத்துல ரெண்டு புரொஃபஷன்ஸ்ல சக்சஸ்ஃபுல்லா இருக்காங்க; இருப்பாங்க.Acting and skating ..? Sethuraman's life ...

என் ஃப்ரெண்ட் அமெரிக்கால டாப் நியூராலஜிஸ்ட். அவர் ஸ்வீம்மிங்கிலும் கோல்ட் மெடலிஸ்ட். ஒருத்தரே ரெண்டு துறைகள்ல ஜெயிக்க முடியும் என்பதற்கு உதாரணமா என்னையும் சொல்லலாம். நடிப்புல இன்னும் நான் ஸ்டார் ஆகல. ஆனா, மெடிசன்ல நான் டேலண்ட் டாக்டர்னு பெயர் வாங்கிட்டிருக்கேன். நடிப்பு எனக்கு passion. மருத்துவம் எனக்கு புரொஃபஷன். ரெண்டையும் குழப்பிக்க விரும்பல....’’  என அவ்வப்போது சில பேட்டிகளில் மனம் திறந்துள்ளார் சேது. 

‘‘என் கேரியரை ‘வாலிபராஜா’வுக்கு முன் ‘வாலிப ராஜா’வுக்கு பின் என ரெண்டா பிரிக்கலாம். அந்தப் படம் சரியான டைம்ல ரிலீஸ் ஆகி இருந்தா, ஹீரோ கனவுல மிதந்து, அடையாளம் தெரியாம காணாமப் போயிருப்பேன். ஆனா, பல்வேறு காரணங்களால அந்தப் படம் ரிலீஸாகவே மூணு வருஷங்களாச்சு.

Acting and skating ..? Sethuraman's life ...

எங்க ஃபேமிலியே டாக்டர் ஃபேமிலிதான். அப்பா, தாத்தா, சொந்தபந்தங்கள்னு எல்லாருமே டாக்டர்ஸ்தான். அப்பா டாக்டர் விஸ்வநாதன், கைனகாலஜிஸ்ட். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல மெடிக்கல் ஹெட் ஆக இருந்தவர். அங்குள்ள ஹாஸ்பிடலுக்கும் அவர்தான் இன்ஜார்ஜ்.

இப்படி ஃபேமிலியே மெடிசன்ல இருக்கறதால இயல்பாவே நானும் டாக்டருக்கு படிக்க ஆரம்பிச்சுட்டேன். அதேநேரம் சின்ன வயசுல இருந்தே சினிமா பார்ப்பதிலும் ஆர்வம் அதிகமா இருந்தது. மெடிசன் சேரும் போது அப்பா மாதிரி சீரியஸான துறையை செலக்ட் பண்ணினா தினமும் ஆபரேஷன், ஐசியுனு நேரம் காலம் இல்லாம ஓடவேண்டியிருக்கும். அப்படி ஒரு டென்ஷனான டாக்டரா இருக்க விரும்பல. எந்த அழுத்தமும் இல்லாம ஃபீரியா ஒர்க் பண்ண விரும்பினேன். டெர்மடாலஜியை தேர்வு செய்தேன்.

இப்ப எல்லாருமே இந்தத் துறைக்கு வர்றாங்க. ஆனா, 2010ல வேற எந்த துறைலயும் சீட் கிடைக்காதவங்கதான் டெர்மடாலஜிஸ்ட் ஆவாங்க! அண்ணாமலைலதான் நானும் மெடிசன் படிச்சேன். எங்க மெடிக்கல் காலேஜ்ல கல்ச்சுரல் நடந்தது. அதுக்கு சீஃப் கெஸ்ட்டா சந்தானத்தை அழைச்சிருந்தேன். அங்கதான் அவர் நட்பு கிடைச்சது. அவர் அப்ப டிவி சேனல்ல காமெடி நிகழ்ச்சி பண்ணிட்டிருந்தார். சின்னத்திரையில் இருந்த அவரை முதன்முறையா சீஃப் கெஸ்ட்டா அழைச்சுட்டு வந்தேன். நான் எம்பிபிஎஸ், எம்டி முடிக்கற டைம்ல சந்தானம் என்னைக் கூப்பிட்டு, ‘நீங்க நடிக்கலாமே’னு சொன்னார்.

Acting and skating ..? Sethuraman's life ...

‘யார் வாய்ப்பு கொடுப்பாங்க? ஜோக் அடிக்காதீங்க’னு சிரிச்சேன். ‘சீரியசா சொல்றேன்... நீ என் படத்துல நடிக்கப் போறே. எப்படி இருக்கியோ, அப்படித்தான் நடிக்கணும். ஒரு டாக்டர், இன்னொசன்ட் பையன்... இதான் கேரக்டர். உனக்கு செட் ஆகும்’னு சொன்னார்.

இப்படி தேடி வந்த வாய்ப்பு என்பதை விட சந்தானம் சார் என் மேல வைச்ச நம்பிக்கைல என்னை தேடி வந்த வாய்ப்புனு சொல்லலாம். இப்படித்தான் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பண்ணினேன். பொதுவா பெற்றோர்கள், ‘உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..? டாக்டருக்கு ஒழுங்கா படி’னு சொல்வாங்க. ஆனா, எங்கப்பா என்னை டிஸ்கரேஜ் பண்ணல. ‘படிச்சு முடிச்சுட்டு நடி... இல்ல என்னவேணா பண்ணு’ன்னார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஃபன்னா ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பண்ணினேன்.

அப்ப எனக்கு ஆக்ட்டிங் பிடிபடல. சந்தானம் தான், ‘நாம கூட்டிட்டு வந்துட்டோம். அவன் கேரியர் நல்லா இருக்கணும்’னு பொறுமையா எனக்கு கத்துக் கொடுத்தார். அந்தப் படம் ரிலீசானப்ப நான் ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்ல டிரெயினிங் எடுத்துட்டு இருந்தேன். படம் நல்ல ரீச். ஆக்ட்டிங் மேல ஆர்வம் வந்துடுச்சு. அந்த ஆசைல பண்ணினதுதான் ‘வாலிப ராஜா’. சந்தானம் காமெடி நடிகரா பண்ணின கடைசி படம் அது. அவரோட நட்பும் அன்பும் இப்ப வரை தொடருது...’’ என நினைவூட்டுவார். Acting and skating ..? Sethuraman's life ...

‘‘எங்கப்பா எனக்கு ஃப்ரீடம் கொடுத்தார். நான் அதை ஒரு கேரியரா மாத்தியிருக்கேன். இப்ப அறுபது பேருக்கு சம்பளம் கொடுத்துட்டிருக்கேன். ‘வாலிப ராஜா’ ஒரு வகைல என் கேரியரை தீர்மானிச்ச படம்னு சொல்றதுக்கு காரணமிருக்கு.முன்னாடியே சொன்னா மாதிரி அந்தப் படம் ரிலீஸ் ஆகவே மூணு வருஷங்களாச்சு. படமும் சுமாராதான் போச்சு. அந்த நேரத்துல நாலு வருஷங்கள் வீணடிச்சிட்டோமோனு யோசிச்சு கலங்கினேன். அப்புறம் என் ப்ளஸ் எதுவோ அதை இன்னும் ஸ்டிராங்கா ஆக்கிக்கணும்னு முடிவு செஞ்சேன். என் லைஃப், மெடிசன்தான்னு
தீர்மானிச்சேன்.

ரெண்டு வருஷங்கள் என்னை மேம்படுத்திக்க, மெடிசன்ல என்னை அப்டேட் பண்ணிக்க, முடிவு செஞ்சேன். அமெரிக்கா, லண்டன்னு 15 நிறுவனங்கள்ல உள்ள கோர்ஸ்கள்ல பங்கேற்றேன். என் புரொஃபசன்ல ஸ்டிராங்கா பெயர் வாங்க விரும்பினேன். இந்தத் துறைல அட்வான்சா இருக்கற அத்தனை மெஷின்களையும் கோடிகள்ல வாங்கி க்ளினிக்குல இப்ப வைச்சிருக்கேன்.  Acting and skating ..? Sethuraman's life ...

எங்கப்பா மாதச் சம்பளம் வாங்கினவர். என் முயற்சில நான் தோத்துடக் கூடாதுனு உறுதியா இருக்கேன். பணமெல்லாம் புரட்டினதுதான். க்ளினிக் ஆரம்பிச்ச ரெண்டு வருஷங்கள் எந்த வருமானமும் இல்ல. அப்ப நைட் படுத்தா தூக்கமே வராது. ரொம்ப தவிச்சேன். ரிஸ்க் இல்லாம வளர்ச்சி இல்ல. முதல் சென்டர் போயஸ் கார்டன்ல. அது பிக்கப் ஆனதும் அடுத்து அண்ணாநகர். இப்ப ஈசிஆர்ல ஆரம்பிச்சிருக்கேன். என்னை தவிர, டெர்மடாலஜிஸ்ட்டே மூணு டாக்டர்ஸ் இருக்காங்க. ஹேர் டிரான்ஸ்பிளான்ட்க்கு தில்லி எய்ம்ஸ்ல இருந்து டாக்டர்ஸ் வந்து பண்றாங்க.

சினிமாவும் என் passion ஆக இருக்கறதால கிளினிக் என்னை மட்டுமே நம்பி இருக்கக்கூடாதுனு ஒரு நல்ல டீமை உருவாக்கிட்டேன். என்கிட்ட இருக்கற டிவைஸ், டிரெயின்ட் பர்சன்ஸ் பார்த்துட்டு இந்தியால உள்ள அத்தனை டாப் டாக்டர்களும் தங்கள் பேஷண்ட்ஸை எங்களுக்கு ரெக்கமண்ட் பண்றாங்க. அதனாலதான் இப்ப கூட்டம் வருது. எல்லாமே மவுத் டாக்தான்.Acting and skating ..? Sethuraman's life ...

லைஃப்ல shortcutsனு எதுவுமில்ல. யாருமே பண்ணாத ஒரு விஷயத்தை பண்ணினேன். ஒரு கோடி ரூபாய்க்கு (பேங்க் லோன்தான்) ஒரு லேசர் எக்யூப்மென்ட் வாங்கினேன். சக டாக்டர்ஸே என்னைக் கூப்பிட்டு, ‘வெளிநாட்டுலயே இந்த மிஷின் மூணோநாலோதான் இருக்கு. இதுல போய் பணத்தை இன்வெஸ்ட் பண்ணியிருக்கியே... உனக்கு என்னாச்சு’னு அக்கறையா கேட்டாங்க.

யார் பேச்சையும் காதில் வாங்கிக்கல. வந்த வருமானத்தை வச்சு, அடுத்த லேசர், அதோட வருமானத்துல இன்னொன்னு இப்ப பனிரெண்டு எக்யூப்மென்ட்ஸுக்கு மேல வாங்கி வைச்சிருக்கேன். எங்க குவாலிட்டி இருக்கோ... எங்க எக்யூப்மென்ட் டிவைஸ், டிரெயின்ட் பர்சன்ஸ் இருக்காங்களோ அங்க ஆட்டோமெடிக்கா பேஷண்ட்ஸ் வருவாங்க ‘’ என நம்பிக்கையுடன் பேசிய சேதுவின் மூச்சு அடங்கிப்போய் விட்டது.Acting and skating ..? Sethuraman's life ...

அவரது மனைவி உமா, அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தவர். வேலையை உதறிவிட்டு கணவரின் க்ளினிக்கை கவனிக்கிறார். சேது - உமா தம்பதியின் ஒரே ஒரு செல்லமகள் சஹானா. இப்போது அப்பா சேதுவை தேடி அழுது கொண்டிருக்கிறார் சஹானா...!

Follow Us:
Download App:
  • android
  • ios