பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் நண்பன் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா. தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார். காதல் விவகாரம் காலை வாரியதோடு பட வாய்ப்புகளையும் பறிகொடுத்தார் இலியானா. எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

அதற்காக பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தும் இலியானா, அவற்றை தனது இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பட வாய்ப்பு குவிகிறதோ இல்லையோ, இலியானாவின் அதிரடி கவர்ச்சிக்கு சோசியல் மீடியாவில் லைக்குகள் குவிகிறது. 

தற்போது இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுடன் பாகல் பண்டி ஹிந்தி படத்தில் நடித்துள்ளார் இலியானா. முழுக்க முழுக்க காமெடி படமான இதில் இலியானா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இலியானாவில் இரண்டாவது ரவுண்டிற்கு இந்த படம் தான் ஒப்பனிங்காக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே இந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் சமந்தா முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். 

மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலியானா, படுகவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பட்டனும் இல்லாமல், ஜிப்பும் இல்லாமல் இலியானா அணிந்துள்ள சில்வர் நிற கோட் போன்ற உடை சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.