ஒரே அறையில் மூன்று ஆண்களுடன் தங்கி இருப்பது போன்றும், செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுவது போன்றும் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க பிரபல நடிகை தமன்னா ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் குயின். கங்கனா ரனாவத் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். சுமார் 13 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட குயின் திரைப்படம் சுமார் 108 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது. இந்த படத்தில் நடிகை கங்கனா ரனாவத் மிகவும் துணிச்சலான பெண்ணாக நடித்திருப்பார்.

இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தனியாக சென்று அங்கு வாழ்க்கை முறையை கற்றுக் கொள்ளும் ஒரு பெண்ணாக கங்கனா நடித்திருப்பார். மது அருந்துவது, புகை பிடிப்பது என அனைத்து கெட்ட பழக்கங்களையும் கொண்ட பெண்ணாக கங்கனா ரனாவத் இந்த படத்தில் நடித்திருப்பார். மேலும் பிரான்சில் ஒரே அறையில் 3 ஆண்களுடன் தங்கியிருப்பது போன்றும், அவர்களுடன் செக்ஸ் ஷாப் என்று சொல்லக்கூடிய கடைகளுக்கு செல்வது போன்றும் காட்சிகள் இருக்கின்றன.

இத்நகுயின் திரைப்படத்தை தான் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். மகாலட்சுமி என்று இந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளார். இந்தியில் கங்கனா நடித்த கேரக்டரில் தெலுங்கில் தமன்னா நடிக்க உள்ளார். மேலும் கங்கனாவை போலவே படத்தில் சிகரெட் பிடிப்பது போலவும், மது அருந்துவது போலவும், ஒரே அறையில் மூன்று ஆண்களுடன் இருப்பது போலவும், செக்ஸ் ஷாப்புக்கு செல்வது போலவும் தமன்னாவும் நடிக்க உள்ளார்.

என்னதான் தமன்னா தெலுங்கு நடிகையாக இருந்தாலும் தமிழில் அவருக்கு என்று ஒரு இமேஜ் உள்ளது. அந்த இமேஜை மீறி தமன்னா தற்போது நடிக்க உள்ளார்.