இயக்குநர் பா.ரஞ்சித்தின் கடைசிப்படமான ‘காலா’ ரிலீஸாகி ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. ஆனால் தனது கலவரமான பேசுக்களால் எப்போதும் ஊடகங்களின் ஹாட் டாபிக்காகவே இருந்துவருகிறார். சோழ மன்னன் ராஜராஜன் குறித்த அவரது சமீபத்திய பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அவரது எட்டுஜாதி  சொந்தபந்தங்கள் தற்போது #PreyFormentalranjith என்ற ஹேஷ்டாக்கை வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித்,  மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர் மன்னர் ராஜராஜசோழன். அவரது ஆட்சியிலிருந்துதான்  ஜாதி பிளவு, தேவதாசி முறை ஆகியவை கொண்டுவரப்பட்டன. தற்போது ராஜராஜ சோழன் எங்கள்  ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவருடைய ஆட்சிதான் இருப்பதிலேயே  இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்' என்று ஆவேசமாகப் பேசியிருந்தார்.

அதற்கு மிக ஆக்ரோஷமாக பதிலளித்த ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில்,...மாமன்னர் ராஜராஜ சோழனை இழிவாக பேசியுள்ள ப.ரஞ்சித்தின் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. திக தலைவர் கி.வீரமணியை அடுத்து இன்று இவர். இவர்கள் அனைவருமே ஜோஷ்வா மதமாற்றும் திட்டத்தின் கையாட்கள்.  இவர்கள் அனைவரின் குறிக்கோள் தமிழகத்தை கால்டுவெல் மண்ணாக்குவதே’என்று குறிப்பிட்டு ரஞ்சித் தனது மனைவி மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

ஹெச்.ராஜாவின் கொந்தளிப்பைத் தொடர்ந்து சில துக்கடா அமைப்புகள் பா.ரஞ்சித் குறித்து மட்டமான பதிவுகளை பகிர்ந்துவருகிறார்கள். போதாக்குறைக்கு ராஜராஜன் சோழன் பற்றி தவறாக  பேசியதாக இயக்குநர்  பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.