மாடல் மாரா பதிவிட்ட ஒரு பதிவு அவர் அடைந்த பெருமிதத்தை உணர்த்துவதாக  அமைந்துள்ளது

கடந்த வாரம் நடைப்பெற்ற ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் ஸ்விம் சூட் ரேம்ப் வாக்  நடைபெற்றது.

இந்த ரேம்ப் வாக்கில் அவர் அப்படி என்னதான் செய்தார் என்று தெரியுமா..? ஏன் அனைத்து மீடியாக்களும் கூட அவரை  கவர் செய்தது...இது போன்ற பல கேள்விகளுக்கு  விடை இங்கே உள்ளது

வித விதமான ஆடை மட்டுமே அணிந்து வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து  வந்தனர்.ஆனால் மாரா வித்தியாசமான ஒரு நிகழ்வை நடத்தி உள்ளார். இந்த ரேம்ப் வாக்கில், பசித்த குழந்தைக்கு பால் கொடுத்தவாரே ரேம்ப் வாக் நடந்து வந்துள்ளார்.

இந்த ஒரு விஷயம் தான் உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது.

இது குறித்து மாரா தெரிவிக்கும் போது, மக்களால் என்னை அடையாளம் காண முடியுமா என்று ஏங்கின காலம் சென்று, தற்போது இந்த அளவிற்கு பிரபலம் அடைந்து  உள்ளது என்னாலே நம்ப முடியவில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்

மேலும் இப்போது வரை என்னால் இதை நம்பவே முடியவில்லை...பத்திரிக்கையில்  முதல் பக்கத்தில் போடும் அளவிற்கு  இது முக்கியமானதாக பார்க்கப் படுகிறது என்றால் பெருமையாக இருக்கிறது. அதே வேளையில்,ஒரு தாய் குழந்தைக்கு பாலூட்டுவது என்பது நார்மலான ஒன்று. இதனை திட்டமிட்டு நான் செய்ய வில்லை..மேலும் இந்த ஒரு விஷயம், மற்ற பெண்களுக்கு முன் உதாரணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என கூறி உள்ளார்.