Asianet News TamilAsianet News Tamil

த்ரிஷாவும், திருச்சி சிவாவும்... மூனே நாள்ல ரெண்டுவாட்டி பார்த்தாராம்

வேலியில போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதை என்பார்களே, அப்படி ஒரு வில்லங்கமான சங்கதிக்குள் தானே வலிய வந்து மாட்டியிருக்கிறார் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவா.

96 Movie Special news..Trisha-Trichy siva
Author
Chennai, First Published Oct 8, 2018, 4:55 PM IST

வேலியில போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதை என்பார்களே, அப்படி ஒரு வில்லங்கமான சங்கதிக்குள் தானே வலிய வந்து மாட்டியிருக்கிறார் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவா. 96 Movie Special news..Trisha-Trichy siva

விவகாரம் அரசியல் சம்பந்தப்பட்டதல்ல. தம்மாத்துண்டு சினிமா சமாச்சாரம். எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் த்ரிஷாவின் ‘96 படத்தை மூன்றே தினங்களில் இரண்டு முறை பார்த்தாராம் திருச்சி சிவா. அப்படிப்பார்த்துவிட்டு சைலண்டாக இருந்திருக்கலாம். படத்தை மானே... தேனே,,, பொன்மானே... என்று பக்கம் பக்கமாக தனது வலைதளப் பக்கங்களில் வாசித்துக்கொண்டிருக்கிறார். 96 Movie Special news..Trisha-Trichy siva

முடிவில் ‘இதற்குமேல் படத்தைப் பற்றி விவரிப்பது இனி பார்க்க வருபவர்களின் ஆச்சர்யங்களையும், சிலிர்ப்பையும் குறைத்து விடும். உழைப்பிற்கும், அதன் விளைவாக உருவாகும் உன்னதமான படைப்பிற்கும் அங்கீகாரமும், பாராட்டும் தருவதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்ததன் விளைவே 96 படம் குறித்த இந்த என் பதிவு’ என்று முடிக்கிறார். 96 Movie Special news..Trisha-Trichy siva

இதைப் படித்துவிட்டு சும்மா இருப்பார்களா நம்ம நெட்டிசன்கள்?

விஜய் சேதுபதி மனசுல த்ரிஷா....சிவா மனசுல புஷ்பா...

ஒரு முன்னாள் காதல் மன்னனுக்குத்தான் இன்னொரு காதல் மனசோட அருமை தெரியும் என்று சகட்டுமேனிக்கு கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஜம்முன்னு படம் பார்த்துட்டு எதுவும் பேசாம உம்முன்னு இருந்திருந்தா, மத்தவனுக கம்முன்னு கிடந்திருப்பானுகளே சிவா சார்.

Follow Us:
Download App:
  • android
  • ios