ஒரு முழு நீள ஆபாசப் படத்தை எடிட்டிங்கே இல்லாமல் பார்த்தது போல் இருக்கிறது, நடிகை பிக்பாஸ் ஓவியா நடித்து வெளி வரவிருக்கும் 90ml படத்தின் டிரெய்லர். ஒவ்வொரு நொடியும் காமம், விரசம், போதை, ராஜபோதை என்று தமிழ் சினிமாவில் ஒட்டிக் கொண்டிருந்த மிச்சம் மீதி கற்பை கதறக் கதற கற்பழிக்கிறது இந்த டீசர்.

வெளியான மூன்று நாட்களில் யூடியூப் முக்கி முனங்கி, திக்கித் திணறுமளவுக்கு ரிப்பீட்டு, ரிப்பீட்டு என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் யுவன், யுவதிகள் முதல் பெருசுகள் வரை. டீசரின் டைட்டில் கார்டிலேயே ஒரு தாடிவாலாவின் உதட்டை இழுத்துப்பிடித்து பதம் பார்க்கிறார் ஓவியா. ஆக ஆரம்பித்திலேயே அதிரிபுதிரியாக சூடேத்துறாங்களே!...என்றபடி சங்கோஜத்துடன் உள்ளே போனால் ‘18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே பார்க்கவும்’ என்று தெறிக்கவிடுகிறார்கள்.

 

ஓப்பனிங்கிலேயே ஓவியா சென்னை புகழ் கெட்டவார்த்தையுடன் தான் ஆரம்பிக்கிறார் ஆட்டத்தை. அடுத்தடுத்த காட்சிகளில் தம் அடிக்கிறார், ஆடையை அகற்றுகிறார், டபுள் மீனிங் டயலாக்குகளில் பிய்த்து உதறுகிறார். ம்ம்முடியலட பாஸ் சத்தியமா.

அட ஓவிதான் இப்படி என்றால் அவரோடு கூட நடித்திருக்கும் மேலும் நான்கு பெண்களும் இதைவிட இதைவிட செம்ம ஹாட். வார்த்தைகளாகட்டும், காட்சிகளாகட்டும் கன்னாபின்னாவென போங்கள். லேடீஸ் ஹாஸ்டலுக்குள் பேசப்படும் அடல்ட்ஸ் ஒன்லி சம்பாஷனைகளை சர்வ சாதாரணமாக படம் நெடுக அள்ளித் தட்டியிருப்பார்கள் போல. ‘உனக்கு ஆண்டவன்  அள்ளி கொடுத்திருக்கான், எனக்கு கிள்ளிதான் கொடுத்திருக்கான், இவளுக்கோ வெறும் புள்ளிதான் வெச்சிருக்கான்.’ என்று ரூம் போட்டு....அதில் எக்ஸ்ட்ராவாக சரக்கும் போட்டு யோசித்து எழுதியிருப்பார்கள் போல.

சர்வசாதாரணமாக டிரெய்லர் முழுக்க ஓவியா கோஷ்டி சரக்கடிக்கிறது, கஞ்சா அடிக்கிறது. ஒரே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஐந்து பெண்களின் அராத்து வாழ்க்கைதான் இந்தப் படம் என்கிறார்கள்.

படத்தில் லீடு ரோலான ஓவியாவின் ஆபாச ஆட்டத்தை பார்த்துவிட்டு, பிக்பாஸில் அவரோட தங்க குணத்துக்காக ‘ஓவியா ஆர்மி’ தொடங்கியவர்களும், ஓவியா மாதிரி ஒரு மகள், மருமகள் வேணுமுன்னு சொன்னவங்களும் வாய் மட்டுமல்ல.....கண்ணடைத்துக்கும் கிடக்கிறார்கள். ஓவியா ஆர்மியை ஆகாத கோஷ்டிகள் ‘ஓவியா இப்படியொரு கேடுகெட்ட படத்துல நடிச்சது மூலமா அவளோட மானம் இல்லடா உங்க மானத்தைதான் நடுத்தெருவுல உருவியிருக்கா. ஆர்மி ஆரம்பிச்சவங்க தூக்குல தொங்கி சாவுங்கடா’ என்று இணையத்தில் வெளுத்திருக்கிறார்கள்.

 

ஆனால் படத்தரப்போ ‘சென்சேஷனல் ப்ரமோவுக்காகதான் இப்படி டிரெய்லர் வந்திருக்குது. படம் இப்படியெல்லாம் இருக்காது.’ எனும் ரீதியில் காதில் பூந்தோட்டத்தை சுற்றிக் கொண்டிருக்கிறது.

 

இந்தப் படத்தின் டிரெய்லர் கோலிவுட்டை தாறுமாறாக அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சீனியர் நடிகர்கள் டிரெய்லரைப் பார்த்துவிட்டு டென்ஷனாகிவிட்டார்களாம். அதற்கு ஒரு இயக்குநர் ‘ஷங்கர் எடுத்த பாய்ஸ் படத்தை விடவா இது மோசமா இருக்குது?’ என்று வக்காலத்து வாங்கினாராம். ஒரு வகையில் அதுவும் கரெக்டுதான். அதுல விடலை பசங்க, இதுல வயசுக்கு வந்த, அதைத் தாண்டிய பொண்ணுங்க, அவ்ளோதான்.

சரி, இந்தப் படத்துக்கு மியூஸிக் யார் தெரியுமா? வேற யாரு நம்ம STR தான்.

அதானே! வெளங்கிடும்.

(பாஸ்....நியூஸை வாசிச்சுட்டு எங்கே போறீங்க...90ml டிரெய்லரை மறுபடியும் பார்க்கத்தானே!...அடேய் சொல்லிட்டு போங்கடா, நாங்களும் வர்றோம்.)