ஒவ்வொரு வருடமும் 80 களில், தமிழ் திரையுலகை தங்களுடைய நடிப்பால் அலங்கரித்த, நடிகர் - நடிகைகள், ஒன்றுகூடி தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களையும், நடப்பையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த விதத்தில் இந்த வருடமும் இவர்கள் ஒன்றுகூட உள்ளனர். இதுகுறித்து முன்னரே அறிவிக்கும் விதமாக, ஏர்போட்டில் இருந்தபடி நடிகர் ரகுமான் செல்பி எடுக்கும் புகைப்படத்தை நடிகை ராதிகா வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில், நடிகர் பிரபு, சரத்குமார், ராதிகா, அம்பிகா, உள்ளிட்ட பிரபலங்கள் உள்ளனர். வருடம் தோறும் ஏதேனும் ஒரு கலரை தீம்மாக வைத்து, ஆட்டம், பாடம் என அட்டகாசம் செய்து வரும் 80களின், இந்த வருட புகைப்படத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

10 ஆவது வருடமாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியை இம்முறை,  தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஒருங்கிணைப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.