37 வயதான இளைஞர் ஒருவர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததோடு அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் தனது கணவருக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவமானப்படுத்திவிட்டதாக 61 வயதான டி.வி. தொடர் நடிகை ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளது கேரளாவில் பலருக்கும்  படபடப்பை உண்டாக்கியுள்ளது.

கேரள  மாநிலம், ஆலப்புழா அருகே காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் 60 வயது டிவி சீரியல் நடிகை. ஏராளமான டிவி சீரியல்களில் நடித்து வரும் இவர் காயங்குளம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த  ஜியா (37) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு போன் மூலம்  பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் நெருங்கிப் பழகினோம். எனக்கு அவர் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தார். பின்னர், அவர் என்னை மிரட்டி  கொச்சியில் உள்ள ஓட்டலிலும், காயங்குளத்தில் உள்ள எனது வீட்டிலும் பலமுறை பலாத்காரம் செய்தார். 

அதை வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியதோடு  சமூக  வலைதளங்களிலும்  வெளியிட்டார். அதோடு எனது கணவருக்கும் இந்த காட்சியை  அனுப்பினார். இதனால், எனது வாழ்க்கை சீரழிந்து விட்டது. எனவே, ஜியா மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். புகாரின்படி  காயங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,  ஜியா இரண்டு வாரங்களுக்கு முன்புதான்  துபாய்க்கு தப்பி சென்று விட்டது தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்து விசாரணை நடத்திவரும் காயங்குளம் போலிஸார் இப்போதைக்கு, வலைதளங்களில் பயங்கர ஸ்பீடாகப் பரவி வரும் அந்த நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோக்களைக் கைப்பற்றியுள்ளனர். 61 வயது டிவி நடிகை 37 வயது இளைஞர் மீது  பலாத்கார புகார் கூறியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.