கொரோனோ பீதியிலும் நடிகர் சேதுராமனின் மரணச்செய்தி கேட்டு ஷாக்கிக் கிடக்கிறார்கள் கோலிவுட் ரசிகர்கள். இவரது மரணம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த போதே திடீரென மாரடைப்பால் மரணமடைந்த சில நட்சத்திரங்களின் மரணங்களையும் நினைவுபடுத்தி விட்டு போயிருக்கிறது. அப்படி அதிரவைத்த மரணங்களின் முரளி முதல் சேதுராமன் மரணம் வரை இப்போது பார்க்கலாம். 

சேதுராமன் என்றழைக்கக்கூடிய சேது த்ன்னிந்தியாவின் பிரபலமான தோல் மருத்துவர். 36 அவயதான அவர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். தமிழில் கண்ணா லட்டு திண்ண ஆசியா , வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா 50/50 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சினிமா துறையை சார்ந்த பலரும் இவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தனர். இவரது மறைவு தமிழ் சினிமாவை அதிர வைத்துள்ளது. 

2019 ஜே.கே.ரித்தீஷ்:-

 

அரசியல்வாதியும், சினிமா நடிகருமான ஜே.கே.ரித்தீஷ், தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் 2019 மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய சென்றிருந்த போது 46 வயதில் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். அவர் நடித்த கடைசி படம் எல்.கே.ஜி. இந்தப்படத்தில் அரசியல்வாதியாக வில்லனாக நடித்திருந்தார். இவரது மரணம் திரையுலகினரை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காரணம் ராமநாதபுரம் தொகுதி திமுக எம்.பி.,யாக ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.   

2018 ஸ்ரீதேவி:- 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழி படங்களில் கோலோச்சியவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி. பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள அவர், 2018 பிபரவரி மாதம் துபாய் ஹோட்டலில் தங்கியிருந்தபோது திடீர் மாரடைப்பால் நீச்சல் குளத் தொட்டியில் சரிந்து விழுந்து மரணமடைந்தார். 

அப்போது அவருக்கு வயது 54. உறவினர் ஒருவரது இல்லத் திருமணத்திற்கு கணவர் போனிகபூர், மகள் குஷி கபூர் ஆகியோரிடன் ஹோட்டலில் தங்கியிருந்த போது அவர் திடீர் மரணமடைந்தார். அவரது மரணம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது மரணம் போனிகபூர் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

2016 பாடலாசிரியர் நா.முத்துகுமார்:-

புகழின் உச்சத்தில் அதிகப்பாடல்களை எழுதி வருபவர் என்கிற பெருமையுடன் கொண்டாடப்பட்டு வந்த நா.முத்துகுமார் தனது 41 வது வயதில் திடீர் மாரடைப்பால் கடந்த 2016ம் ஆண்டு மரணமடைந்தார். தேசிய விருது பெற்ற நா.முத்துகுமார் தமிழ் சினிமா உலகில் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடல்களை இயற்றியுள்ளார். காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களை எழுதியுள்ளார். அவரது இடம் இப்போது வரை தமிழ் சினிமாவில் வெற்றிடமாகவே நீள்கிறது. ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள அவர், 2012ம் ஆம் ஆண்டு மட்டும் 103 பாடல்களை எழுதி முத்திரை பதித்துள்ளார். 

 2010 முரளி:-

கடவுளின் கடவுள் என தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்ப்ட்டு வந்த முரளி கடந்த 2010ம் ஆண்டு செப்டம் 8ம் தேதி அதிகாலை மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. 46 வயதில் அவர் திடீர் மரணமடைந்தது திரையுலை அதிர்ச்சியடையச் செய்தது. 1984ம் ஆம் ஆண்டு பூவிலங்கு படத்தில் அறிமுகமான அவர், 2010ம் ஆண்டு அவரது மகன் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி முரளிக்கு கடைசி படமாக அமைந்தது.