ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமாராவ் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா ஹைதராபாத்தில் கடந்த 29 ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் தற்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவராக இருந்தவர். இவர் கட்சி பொதுக் கூட்டத்துக்காக 28 ஆம் தேதி கார் மூலம் சென்று சென்றார். அப்போது எதிர்ப்பாராத விதமாக இவருடைய கார் சாலை தடுப்பு சுவரில் மோதியது. கார் மிகவும் வேகமாக சென்றதால் இடித்த வேகத்தில் தலைக்குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக இவரை மருத்துவமனியில் சிகிச்சைக்காக அனுமதித்தும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில் ஹரிகிருஷ்ணாவின் உடல், பிரபல தனியார் மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்த போது, அவரின் சடலத்தின் முன்பு நின்று அந்த மருத்துவ மனையில் பணிபுரியும் நர்சுகள் உட்பட நான்கு பேர் செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

இவர்களின் இந்த செல்பி புகைப்படம் பட்டி தொட்டியெங்கும் வைரலாக பரவியது. பலர் இவர்கள் செய்த செய்யலை வன்மையாக கண்டித்திருந்தனர். இந்நிலையில் இந்த ,மோசமான செயலில் ஈடுபட்ட நான்கு போரையும் அதிரடியாக வேலையை விட்டு மருத்துவ நிர்வாகம் நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஹரிகிருஷ்ணாவின் குடும்பத்தினரிடமும் மருத்துவ நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.