4 லட்சம் கொடுக்காம நாமம் போட்ட அட்லீ! வீடியோ வெளியிட்டு 'மெர்சல்' படக்குழுவை கேவலப்படுத்திய வெள்ளைக்காரன்!
விஜய் நடிப்பில், வெளியான 'மெர்சல்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் என விஜய் ரசிகர்களால் ஆஹா ஓஹோ என புகழப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தில் பணியாற்றியதற்காக துணைக்கு கொடுக்க வேண்டிய 4 லட்சம் ரூபாய் சம்பளம் பாக்கி இன்னும் கொடுக்க வில்லை என, இந்த படத்தில் பணியாற்றிய மேஜிக் கலைஞர் வீடியோ ஒன்றை வெளியிட்டு... மெர்சல் குழுவின் மானத்தையே கப்பல் ஏற்றி உள்ளார்.

அட்லி இயக்கத்தில், தளபதி விஜய், எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த திரைப்படம் மெர்சல். இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். அதில் ஒன்று மேஜிக் கலைஞர் வேடம். இதற்காக விஜய்க்கு மேஜிக் பயிற்சி கொடுக்க வெளிநாட்டில் இருந்து தலை சிறந்த
இந்நிலையில், மேஜிக் பயிற்சி கொடுத்த கலைஞர்களில் ஒருவர் தனக்கு 4 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி வழங்கவில்லை என்று புகார் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும், தேனாண்டாள் நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமாவின் கணவர் முரளியுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்ட கருத்துகளையும் ஆதாரமாக வெளியிட்டார். சர்கார் பிரச்னை சற்று ஓய்ந்துள்ள நிலையில், மெர்சலால் மீண்டும் ஒரு பிரச்னை கிளப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர் தயாரிப்பாளரிடம் பேசி இருந்தாலும்... இவரின் பணத்தை பெற்று தரவேண்டியது அட்லீ என்றும் அவர் இதுவரை ஏன் சம்பளம் பெற்று தரவில்லை என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள் மேலும் 'வெள்ளையா இருக்குறவ பொய் சொல்ல மாட்டான்"... என இந்த வீடியோவுக்கு காமெடியாக பதில் கொடுத்து வருகின்றனர்.