இந்தியாவில் பாலியல் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ள நிலையிலும், அங்காங்கே அந்த வேலை அரங்கேறி வருகிறது. குறிப்பாக சினிமாவைச் சேர்ந்த நடிகைகள், துணை நடிகைகள் சீரியல் நடிகைகள் ஆகியோரும் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அந்த தொழிலில் இறங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பல நட்சத்திர விடுதிகளில் பிரபல நடிகைகள் கையும் களவுமாக சிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 

அப்படி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சீரியல் நடிகைகள் விபாச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, செல்போனில் வாடிக்கையாளர் போல் தொடர்பு கொண்ட போலீசார் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சீரியல் நடிகைகளை அழைத்து வரும் படி நடிகர் ஒருவரிடம் பேசியுள்ளனர். அதற்காக ரூ.10.50 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது.  முன்னதாகவே சம்பந்தப்பட்ட போலீசார் நட்சத்திர ஓட்டல் அறைகளில் மறைத்து தயாராக காத்துக்கொண்டிருந்துள்ளனர். 

 

இதையும் படிங்க: Rare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....!

அப்போது அங்கு வந்த நடிகரையும், அவருடன் வந்த 3 சீரியல் நடிகைகளையும் ஓட்டலில் மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் வேறு ஏதேனும் பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதா? இதுபோன்று வேறு எங்கெல்லாம் பாலியல் தொழில் அரங்கேறி வருகிறது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.