ஒரே நாளில் நடிகை சமந்தா நடித்த மூன்று படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால், ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

எப்போதாவது, சில நடிகைகள் நடித்த இரண்டு திரைப்படகள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பது எப்போதாவது நடக்கும். ஆனால் நடிகை சமந்தா நடித்த மூன்று திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது இதுவே தென்னிந்தியாவின் முதல் சாதனையாக கருதப்படுகிறது.

திருமணத்திற்கு பின் நடிகை சமந்தா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'சீமராஜா' இந்த திரைப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதே நாளில் சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'யூடார்ன்' படமும் வெளியாகவுள்ளது.

மேலும் இதே நாளில் நடிகர் மகேஷ்பாபு சமந்தா நடித்த 'சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லெ செட்டு' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் டப்பில் படமான 'நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' என்ற படமும் அதே நாளான செப்டம்பர் 13 ஆம் தேதியே ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஒரு நடிகையின் மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாவது தென்னிந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை என கருதப்படுகிறது. அதனால் இது சமந்தாவின் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.