செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று எந்த  முக்கிய  மூன்று பிரபலங்களின் பிறந்த நாள் என பார்க்கலாம்  வாங்க....

ராதிகா ஆப்தே..! 

ரஜினியின் கபாலி படம் மூலம் பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே, தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.தமிழ் நாட்டின் வேலூரில் பிறந்த இவர், நான்கு படங்களில் நடித்த பின்னர், லண்டன் பயணமாகி படிப்பை தொடர்ந்தார்.

நடிகர் மம்முட்டி 

மம்முட்டி நான்கு தடவைகள் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

நடிகை பானுமதி ராமகிருஷ்ணா

பல மொழிகளில் நடித்த ஓர் இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரின் பெரும்பாலான திரைப்படப் பங்களிப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலேயே அமைந்திருந்தன. திரைப்படத்துறைக்கு இவராற்றிய பங்களிப்பிற்காக 2003ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டார்.


இவர் நடித்த திரைப்படங்கள்

சித்ரபகாவலி, தேவமனோகரி, நல்ல தம்பி, அபூர்வ சகோதரர்கள், ரத்னகுமார், காதல், சண்டிராணி, மலைக்கள்ளன், கள்வனின் காதலி, ரம்பையின் காதல், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், சதாரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார்