டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, மூன்று முக்கிய பிரபலங்கள் வீடியோ மூலம் சர்பிரைஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார், கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காட்டுக்குள், டிஸ்கவரி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் மேன் VS நிகழ்ச்சிக்காக பங்கேற்றார்.

தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்சுடன் பல்வேறு சுரிஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டது மட்டும் இன்றி, மலை ஏற்றம், இருப்பு கம்பியை பிடித்து ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கம் செல்வது... என அனைவரையும் வியக்க வைக்கு அளவிற்கு சாகசங்களை செய்து அசத்தினார் தலைவர்.

இவர் காட்டுக்குள் போக தயாராகும் முன்பே... அவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான உலக நாயகன் கமலஹாசன் வீடியோ மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து நடிகர் மாதவன், பல ஆபத்து அந்த பக்கம் இருக்குனு  சொன்ன ஆண்டவனே நம்ப பக்கம் இருக்கான், அடித்து தூள் கிளம்புங்க என வாழ்த்தினார்.

இவரை தொடர்ந்து, கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்து டஃப்  கொடுத்த, பிரபல பாலிவுட் இயக்குனர் அக்ஷய் குமார், என் வழி தனி வழி என கூறும் நீங்கள்  அச்சமின்றி உங்கள் பயணத்தை தொடருங்கள் என வாழ்த்தினார்.