மும்பை ஐந்து நட்சத்திர ஓட்டலில், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இரண்டு நடிகைகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் அதிகம் வரும் பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில், தொடர்ந்து விபச்சாரம் மற்றும் விபச்சாரத்திற்கு அழகிகளை நடிகைகள் இருவர் சப்லே செய்து வருவதாக, அங்குள்ள லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

எனவே போலீசார் நேற்று இரவு திடீர் என துணை போலீஸ் கமிஷனர் ஸ்வாமி தலைமையில், அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த,  நடிகையும் மாடலுமான அம்ரிதா தனோனா (32 ) என்பவரையும், நடிகை ரிச்சா சிங் என்பவரையும் மடக்கி பிடித்தனர்.

அம்ரிதா தம்பிக்கு முயன்றார். அவரை போலீசார் மிகவும் சாதூர்த்தியமாக மடக்கி பிடித்தனர். மேலும் அம்ரிதா பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய  அர்ஹான் கானின் முன்னாள் காதலி ஆவர். சமீபத்தில் கூட  அர்ஹான் கான் தன்னிடம் 5 லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாகவும், எனவே அவரை சிறையில் அடிக்காமல் ஓயமாட்டேன் என சபதம் எடுத்து சுற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு வரும், தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்களை மடக்குவதற்காக நடிகைகள் இப்படி விபச்சார தொழிலில் ஈடுபட்ட சம்பவம் மும்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.