லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து, தற்போது கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை நவம்பர் 29ம் தேடி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கிடையே, இப்படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று  காலை சரியாக 9 மணிக்கு  வெளியானது. 2.0 டீசரை 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 3டியில் வெளியாகும் அதே நேரத்தில் யூடியூப் மற்றும் 2டியிலும் வெளியாகவுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள 2.0 டீசர் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.