பிரம்மாண்ட இயக்குனர் சங்கருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் 2.0. ஏற்கனவே தமிழில் ரிலீசாகி மெகா ஹிட் கொடுத்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

நேற்று வெளியாகி இருக்கும் 2.0 பிரமோவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பே இதனை உறுதி செய்திருக்கிறது.
இணையத்தில் 2.0 டீஸர் ரிலீசான 12 மணி நேரத்திற்குள்ளாகவே 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இந்த டீசரிலேயே 2.0 படத்தின் கதை என்ன என்பதனை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சங்கர். டீசரின் ஆரம்பத்தில் இருந்தே பறவைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. 

இது தான் இந்த படத்தின் ஒன் லைன் என்ன என்பதற்கான குறிப்பு. பொதுமக்களிடம் இருக்கும் செல்ஃபோன் எல்லாம் மாயமாய் பறந்து எங்கோ செல்கிறது. அது அத்தனையும் ஒன்றாக வில்லனின் கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. செல்ஃபோன் டவரை சுற்றிலும் கழுகுகள் பறந்து சுற்றித்திரிகையில் உருவாகுகிறான் புது வில்லன். இந்த டெக்னிகல் வில்லன் அத்தனை செல்ஃபோன்களையும் இணைத்து மனிதர்கள் மீது நடத்தும் இந்த தாக்குதலில் இருந்து மக்களை காத்திட ஒரு சூப்பர் பவர் தேவைப்படுகிறது.

அந்த இடத்தில் தான் வசீகர்னின் யோசனைப்படி மீண்டும் உயிர்பெருகிறது, சிட்டி ரோபோ. இந்த சிட்டி ரோபோவிற்கும் செல்ஃபோன்களை கொண்டு  பறவைகளின் வடிவில் உருவாகி இருக்கும் இந்த புதிய வில்லனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் தான் இந்த படத்தின் கதை. படத்தின் கதையையே சங்கர் டீசரில் வெளிப்படையாக காட்டி இருக்கிறார்.


இதனால் இந்த படத்தில் இன்னும் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன என உறுதியாக கூறலாம். செல்ஃபோன் டவர்களினால் பறவைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இதை தான் சங்கர் தன் கதையில் கூற வருகிறார் என்றும் இந்த ப்ரோமோவை பார்க்கும் போது தெரிகிறது. 

இதனால் பாதிக்கப்பட்ட பறவைகள் மனித இனத்தின் மீது தொடுக்கு யுத்தம் தான் தான் இந்த படத்தின் கதையா? என்றொரு கேள்வியும் இந்த பிரமோவை பார்க்கும் போது நமக்கு தோன்றுகிறது. ஒட்டு மொத்தத்தில் சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான ஒரு படம் தான் 2.0 என கூறுகிறது 2.0 டீசர். அதனாலேயே என்னவோ மக்கள் மத்தியில் தற்போது கூடுதல் வரவேற்பை பெற்றிருக்கிறது 2.0.