16 வயதே ஆகும் பிரபல இளம் நடிகர்... லோகன் வில்லியம்ஸ், வியாழக்கிழமை இரவு திடீரென காலமானதாக, பிரபல ஹாலிவுட் நடிகர் கிராண்ட் கஸ்டின் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சோகமான பதிவை பதிவிட்டுள்ளார்.

லோகன் வில்லியம்ஸின், இந்த திடீர் மரணத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து  கிராண்ட் கஸ்டின் அவருடைய சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது... “லோகன் வில்லியம்ஸ் திடீரென காலமானார் என்ற அதிர்ச்சி செய்தியைக் கேள்விப்பட்டேன்.

2014 ஆம் ஆண்டு, லோகன் வில்லாமல் தி ஃப்ளாஷ் பைலட் எபிசோட்டில்  நடித்தபோது, லோகனின் திறமை மட்டுமல்லாமல், அவரது தொழில் ஆர்வமும் என்னை மிகவும் கவர்ந்தது. 

இது கற்பனை கூட செய்யமுடியாத ஒன்றாக லோகனின் குடும்பத்திற்கு இருக்கும். என மிகவும் உருக்கமாக தன்னுடைய ட்விட்டர் பதிவு மூலம், லோகனின் மரண செய்தியை ரசிகர்களுக்கு கிராண்ட் கஸ்டின் வெளிப்படுத்தியுள்ளார்.  

லோகன் வில்லியம்ஸ் கனடாவில் பிறந்தார் மற்றும் தி ஃப்ளாஷ் தவிர சூப்பர்நேச்சுரல் மற்றும் தி விஸ்பர்ஸ் போன்ற தொலைக்காட்சி சீரிஸில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.