கடந்த 5ஆம் தேதி லக்னோவில், நாக்ராம் என்ற இடத்தில் தேர்தல் நடந்தது. அப்போது பூத் பணியில் ஈடுபட்டு இருந்த ரீனா திவேதி மஞ்சள் நிற புடவையில் மிடுக்காக கையில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வருவது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

கொளுத்தும் வெயிலில் வாக்குப் பெட்டிகள் சகிதம் குளு குளு போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் வைரலானவர் 32 வயதான ரீனா துவேதி. உ.பி மாநிலத்தின் தேவரியாவில் பொதுப்பணித்துறை ஜூனியர் அசிஸ்டெண்டாக பணியாற்றும் இவருக்கு லக்னோவில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது.

தேர்தல் நேரத்தில் ரீனா துவேதி, கூலிங்கிளாஸ் கண்களும் கையில் வாக்குப் பெட்டியுமாய் நடந்து வந்ததை யாரோ ஒருவர் படமெடுத்திருக்கிறார். அது சமூக வலைதளத்தில் வைரலாகி ‘மஞ்ச சேலைக்காரி’ என உபி வாசிகள் ரீனாவை வாஞ்சையுடன் கொண்டாடினார்கள்.

இந்த ரெஸ்பான்ஸில் மயங்கிய ரீனா, தனது தனிப்பட்ட படங்களையும் முகநூல் வழியாக வைரலாக்கினார். இதனால் மீடியாக்களும் அவரது படங்களைப் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டன. இதன் விளைவு, தற்போது சினிமாவில் நடிக்க பாலிவுட்டில் இருந்து ரீனாவுக்கு அழைப்பு வந்திருக்கிறதாம். அதுமட்டுமல்ல ஹிந்தியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஆக, விரைவில் உபி பொதுப்பணித் துறை ஒரு அழகான அலுவலரை இழக்கப் போகிறது. அதுமட்டுமல்ல. இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கிறார். இவரது செல்லப்பெயர் என்ன தெரியுமா..? ஹனி. அட, இனிப்பாகத்தான் இருக்கிறது.