*கடந்த சில வருடங்களாக தாறுமாறான சறுக்கலை சந்தித்து, ப்ரைம் ஹீரோக்களின் லிஸ்டில் இருந்து எலிமினே செய்யப்பட்டவர் சூர்யா. இப்போது அவர் பெரிதாய் நம்பியிருப்பது தானே தயாரித்து, நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தைத்தான். இந்தப் படத்தின் பாடல் ஒன்றை வானில் ஃபிளைட்டில் பறந்தபடி வெளியிட்டார். அந்த நிகழ்வுக்கு ஏழைக் குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்றிருந்தார். சூர்யாவின் இந்த சூப்பர் குணத்தை பாராட்டாமல், நிகழ்ச்சிக்கு விமானத்தை வழங்கிய விமான நிறுவனமானது ஓவர்  ரூல்ஸை போட்டு இம்சைப்படுத்திவிட்டதாம். தன்னை பெரிதாய் இன்சல்ட் பண்ணிவிட்டனர் என்று கொதிக்கிறாராம் சூர்யா. 
(விடு தல, ஒரு நாள் அவனுங்களுக்கு ‘மாஸ்’ படத்தை போட்டுக்காட்டி பழிவாங்கிடுவோம்)

*ரஜினிக்கு சமீபத்தில் மிகப் பெரிய மன வருத்தத்தை தந்த விவகாரங்களில் முதலில் நிற்பது தயாநிதிமாறனின் பார்லிமெண்ட் பேச்சுதான். ‘ரஜினி வீட்டுக்கு ஏன் ரெய்டு போகலை?’ என்று அவர் கேட்டார். தயாவின் அண்ணன் கலாநிதி தயாரிக்கும் படத்தில்தான் இப்போது ரஜினி நடித்துக் கொண்டிருக்கிறார். அண்ணன் கிளாப் அடிக்க, தம்பி இப்படி ஆப்படிக்கிறாரே என புலம்புறாராம் சூப்பர் ஸ்டார். 
(படம் நட்டமாகும்போது அலறுவாங்க, அப்ப நீ சிரி தலைவா)

*ஆதி நடித்த, நான் சிரித்தால்! எனும் படம் வெளியாகி நாலே நாட்களில் வெற்றிவிழாவும் கொண்டாடிவிட்டனர். இந்த நிகழ்வில் பேசிய குஷ்பு ‘என்னோட சக்களத்தி ஆதிதான். சுந்தரும் இவரும் நடு ராத்திரி ஒரு மணிக்கும் கூட போன்ல பேசுவாங்க’ என்று சொன்னது மிகப்பெரிய சென்சேஷனலாகிவிட்டது. வழக்கமாக குஷ்பு பேச்சை சர்ச்சையாக்கும் நெட்டிசன்கள் இந்த முறை அதை ரசித்து சிரித்திருக்கின்றனர். 
(சுந்தர்.சி படம்தான் காமெடின்னா, வாழ்க்கை அதுக்கு மேலே இருக்கேபா!)

*இந்தியன் -2 படத்துக்கு எந்த நாளில் முடிவெடுத்தார்களோ பஞ்சாயத்து, பஞ்சாயத்து அப்படியொரு பஞ்சாயத்து. எல்லாவற்றையும் தாண்டி ஷூட் ஓடிக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் நடந்த பெரும் விபத்தும், உயிரிழப்புகளும், கடும் காயங்களும் ஷங்கருக்கு பெரிய பயத்தைக் காட்டியுள்ளது. அதைவிட அரண்டு கிடப்பவர் கமல்தான். பெரும் பகுத்தறிவுவாதி, சென்டிமெண்டுகளுக்கு எதிரான அவரே ‘என்னாதான் பிரச்னை?’ என்று நெற்றி சுருக்க துவங்கிவிட்டாராம். இந்தப் படம் நன்னா முடியணும்னு சொல்லி கமல் சார் கோயிலுக்கு போகாம இருந்தா சரி! என்கின்றனர் டீமினர். (கடவுள் இல்லைன்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்! அப்படின்னு டயலாக் எழுதுன மானஸ்தன் யாருபா?)

*தல அஜித்துடன் இயக்குநர் விநோத் இணையும் தொடர் இரண்டாவது படம் ‘வலிமை’. சப்தமே இல்லாமல் இதன் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்ட நிலையில்! இரண்டாம் ஷெட்யூல் இழுக்கிறது, நிதி பஞ்சாயத்து, விநோத்தின் கதை இப்போது அஜித்துக்குப் பிடிக்கவில்லை, ஒருநாள் இரண்டு நாள் என பிய்த்துப்பிய்த்து அஜித் கால்ஷீட் கொடுக்கிறார்! என்றெல்லாம் நாளுக்கொரு தகவல்கள் வருகின்றன. ஆனால் இவை எவையுமே உண்மையில்லையாம். ஆனால் இவற்றை ஒன்றுவிடாமல் வாசித்துவிட்டு, விநோத்துக்கே போன் பண்ணி வயிறுவலிக்க சிரிக்கிறாராம் அஜித். 
(தெறிக்கவிடுறீயே தல)