*ரவிகுமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிவகார்த்தி நடிக்கும் ‘அயலான்’ படத்தின் கதை வேற்று கிரகவாசிகள் சம்பந்தப்பட்டது. அமீர்கானின் ‘பி.கே.’ படம் போல் இதில் சிவகார்த்தி, ஏலியனாக நடிக்கிறார்! என்று முதலில் பிரேக் பண்ணியது ஏஸியாநெட் தமிழ் இணையதளம்தான். இதை கடந்த 17-ம் தேதி வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மூலம் உறுதி செய்திருக்கிறது அயலான் பட க்ரூ. குழந்தைகளுக்கு  நீண்ட  நாள் லீவ் கிடைக்கும் சம்மரில் இந்தப் படத்தை வெளியிட்டு, செமத்தியாக வசூல் பண்ண திட்டமிட்டுள்ளனர். 
(அள்ளுங்க அள்ளுங்க)

*லவ் மேரேஜ் செய்த டைரக்டர் ஏ.எல்.விஜய் மற்றும் நடிகை அமலாபாலின் திருமணம் டைவர்ஸில் முடிந்தது. டைரக்டர் வேறொரு திருமணம் செய்து கொள்ள, அமலாவோ இப்போது ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு ‘தனுஷே காரணம்’ என்றார் இயக்குநரின் அப்பாவும், தயாரிப்பாளரும், நடிகருமான ஏ.எல்.அழகப்பன். இந்த கேள்வியை அமலாபாலிடம் கேட்டபோது “என் விவாகரத்து, என் சொந்த விஷயம். இதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல, நானே பொறுப்பு. தனுஷ் என் நலன் விரும்பி” என்று பதில் தந்துள்ளார் ஆவேசமாக. 
(சர்தான்)

*பிக்பாஸ் லாஸ்லியா, ஸ்டார் ஸ்பின்னர் ஹர்பஜனோடு இணைந்து நடிக்கும் ‘ஃப்ரெண்ட்ஸிப்’ படத்தில் காமெடி சதீஷ் இணைந்தார், அதன் பின் முக்கிய ரோலில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் இணைந்துள்ளார். வழக்கம்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அர்ஜூன் தன் நடிப்பை (!?) தூக்கி சாப்பிட்டுடுவாரே என பஜன் பயந்துள்ளார். 
(ஆக்சுவலா லாஸ்லியாதானே பயப்படணும்)

*ராஷ்மிகாவுக்கு அப்படி விஜய் மேலே என்னதான் வெறித்தனமான காதலோ தெரியலை. பொண்ணு எங்கே மைக் கிடைச்சாலும் ‘விஜய் சார் லவ்வரா இருக்கணும்!’ என்று கொளுத்திக் கொளுத்திப் போடுகிறார். சக நடிகைகளோ ‘விஜய் கூட ஒரு படத்துல நடிக்கிறதுக்காக எப்படி ட்ரிக் பண்றா பாரு!’என்கிறார்கள். ஆனாலும் ராஷு கொஞ்சம் கூட கண்டுக்காம விஜய்யை தொரத்தி தொரத்தி லவ்வுது. 
(திருமதி தளபதி விஜய் எதற்கும் கவனமா இருப்பது நல்லது)

*ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் வெளுத்துக் கட்டிய ‘நெற்றிக்கண்’ படத்தின் ரீமேக் உரிமை, அதுயிதுவென விவகாரங்களில் இயக்குநர் கம் நடிகர் விசுவுக்கும், கே.பாலசந்தரின் மகள் புஷ்பாவுக்கும் செமத்தியாக முட்டிக் கொண்டுள்ளது. விசுவை புஷ்பா விமர்சிக்க, பதிலுக்கு விசுவோ ‘மோர்க்களி, சேப்பங்கிழங்கு, மோர்க்குழம்பு, வழவழா, கொழ கொழா!’ என திட்டித் தீர்த்துவிட்டார். 
(கோதாவரி ஒரு கிளாஸ் தண்ணி கொடுடி)