Asianet News TamilAsianet News Tamil

போஸ்ட் மட்டும் போட்டா போதுமா..? இதையும் போடுங்க... வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்-அப் வேண்டுகோள்..!

விரைவில் இன்சூரன்ஸ் துறையிலும் வாட்ஸ் அப் நிறுவனம் களமிறங்க உள்ளதாக இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அபிஜித் போஸ் தெரிவித்துள்ளார்.

WhatsApp appeal to customers
Author
India, First Published Dec 18, 2020, 5:37 PM IST

விரைவில் இன்சூரன்ஸ் துறையிலும் வாட்ஸ் அப் நிறுவனம் களமிறங்க உள்ளதாக இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அபிஜித் போஸ் தெரிவித்துள்ளார்.

குகிறது. இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பல கோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது வாட்ஸ்அப் மாறி உள்ளது. வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கிறது. பேஸ்புக் கட்டுப்பாட்டில் இயங்கும் வாட்ஸ்அப் இந்தியாவில் சுமார் 400 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது.WhatsApp appeal to customers

வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் நோக்கிலும் பயனாளிகளை கவரும் விதத்திலும் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. எதிர்கால அப்டேட்களை கருத்தில் கொண்டு தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவின் வர்த்தகத்துறையில் களமிறங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், இன்சூரன்ஸ், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளை குறிவைத்து, மிகப்பெரிய திட்டங்களை உருவாக்கி வருகிறது.

ஏற்கனவே, பணப்பரிமாற்ற துறையில் களமிறங்கிய வாட்ஸ் அப்,  “வாட்ஸ்அப் பே சர்வீஸ்” மூலம் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை தொடங்கியுள்ளது. மேலும் இது கூகுள் பே, பேடிஎம் போன்று எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 20 மில்லியன் பயனாளர்கள் வாட்ஸ்அப் பே மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி, எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ வங்கிளுடன் வாட்ஸ்அப் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப் பே திட்டத்தை விரிவுபடுத்த ஆர்.பி.ஐ மற்றும் என்.பி.சி.ஐ அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.WhatsApp appeal to customers

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற facebook fuel for india 2020 நிகழ்வில் பங்கேற்று பேசிய வாட்ஸ் அப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அபிஜித் போஸ், வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய திட்டங்களின் பட்டியலை வெளியிட்டார். அதில், ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்தார். அதற்காக எஸ்.பி.ஐ ஜெனரல் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். கடைகோடி மக்களுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் sachet என்ற புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், மக்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் வாட்ஸ்அப் ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், ஹெச்.டி.எப்.சி வங்கியின் பென்சன் திட்டமும் கூடுதலாக வழங்கப்படும் என கூறினார்.WhatsApp appeal to customers

வாட்ஸ்அப் மெஸஞ்சர் மூலம் ஹெல்த் - லைப் - நிதி பாதுகாப்பு ஆகிய மூன்றையும் ஒரே தளத்தில் மக்கள் பெற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார். விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளிலும் அடுத்த ஆண்டில் கால்பதிக்க இருப்பதாகவும் அவர் கூறினார். உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வாட்ஸ்அப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அபிஜித் போஸ் தெரிவித்துள்ளார். அதிகமான பயனர்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளதால் நிறுவனத்தின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios