2020 கற்றல் மற்றும் பின்னடைவிற்கான ஆண்டு. சிலர் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும், குடும்பத்துடன் அதிகநேரம் செலவிடுவதற்கும் கிடைத்த வாய்ப்பை நினைத்து இந்த சூழலை  வரவேற்றாலும், சுதந்திரமாக பயணிக்க முடியாமல் போனவர்கள் அல்லது வார இறுதியில் சாலை பயணங்கள் செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் ஏமாற்றமடைந்தனர். 2020 கற்பித்த மிக முக்கியமான பாடம், ஒரு நாளை கைப்பற்றுவதும், மகிழ்ச்சியைத் தள்ளிவைப்பதும் அல்ல; பாதுகாப்பு குறித்த புதிய பார்வையை வழங்கியுள்ளது. 2021 வித்தியாசமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களை உருவாக்கியுள்ளது.

புதிய காருடன் புத்தாண்டை தொடங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், மெர்சிடிஸ் பென்ஸ் உங்களுக்காக ஸ்பெஷல் ஆஃபர்களை வழங்குகிறது. மெர்சிடிஸ் பென்ஸின் E-Class கார், பென்ஸின் உற்பத்திகளில் மிகச்சிறந்த கார். வடிவமைப்பு, பாதுகாப்பு, நிலைத்தன்மை, டெக்னாலஜி என அனைத்து வகையிலும் மேம்பட்ட கார். மெர்சிடிஸ் பென்ஸ் E-Class காரை 2021ல் நீங்கள் கண்டிப்பாக வாங்கி ஓட்டி மகிழ வேண்டும் என்பதற்கான ஆறு காரணங்களை இதோ...


வலுவான எஞ்ஜின்: மெர்சிடிஸ் பென்ஸ் E-Class கார்கள் மிகச்சிறந்த வலுவான எஞ்சினை பெற்றுள்ளது. எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் திறன் கொண்ட எஞ்ஜின். நகருக்குள் நீங்கள் காரை ஓட்டும்போது, E-Class காரின் எஞ்ஜினின் செயல்திறன் மிகச்சிறப்பாக இருக்கும்.

மென்மையான சவாரி: மக்கள் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வாங்க ஆர்வம் காட்ட முக்கியமான காரணங்களில் ஒன்று, மிகவும் மென்மையான, இனிமையான சவாரி அனுபவத்தை மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் வழங்குவதுதான். நீண்ட தூரம் சவாரி செய்வதற்கும், நெடுஞ்சாலைகளில் சவாரி செய்வதற்கும் E-Class கார் மிகப்பொருத்தமான கார். காரின் 4 பக்கமும் இருக்கும் ஏர் சஸ்பென்சன் நல்ல குஷனை கொடுக்கிறது.

உயர்தர தொழில்நுட்பம்: அண்மையில் மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்யும் அனைத்து கார்களுமே உயர்தர தொழில்நுட்பங்களுடன் கூடியவை. இணைப்பு, உதவி, கம்ஃபர்ட் ஆகிய சிறப்பம்சங்கள் நிறைந்தவை. மெர்சிடிஸ் பென்ஸ் கனெக்ட் மீ ஆப் வாடிக்கையாளர்களுக்கு கார் எந்த இடத்தில் இருந்தாலும் அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும்.

வசதியான மற்றும் விசாலமான கேபின்: மெர்சிடிஸ் பென்ஸ் E-Class கார் ஓட்டுநர் மற்றும் பயணம் செய்பவர்களுக்கு தாராளமான இடவசதியை வழங்குகிறது. இந்த கார் புதிய சீட்டிங் கான்செப்ட்டை கொண்டது. சாயும் வசதி கொண்ட பின்னிருக்கைகள், பர்மிஸ்டர் சவுண்ட் சிஸ்டம், அகலத்திரை காக்பிட், பின்புற இருக்கை வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பின்புற தொடுதிரை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மிகச்சிறந்த பாதுகாப்பு: மெர்சிடிஸ் பென்ஸ் E-Class கார் மிகச்சிறந்த பாதுகாப்பு வசதிகளை கொண்ட கார். உயர்தர பாதுகாப்பு அமைப்பு, ஆக்டிவ் பிரேக் சிஸ்டம், பெடெஸ்ட்ரியன் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு ஆகிய வசதிகளை கொண்டது என்பதால், மிகவும் பாதுகாப்பான கார் E-Class.

 

சிறந்த விலையில் வாங்குங்க: மெர்சிடிஸ் பென்ஸ் E-Class காரை விட சிறந்த கார் கிடையாது. மாதம் ரூ.49,555 என்ற தவணையில் E-Class காரை வாங்குங்க. ஓராண்டுக்கான இன்சூரன்ஸும் செய்து கொடுக்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.