Asianet News TamilAsianet News Tamil

ஒண்ணுக்கும் உதவாத ரயில்வே பட்ஜெட்... தனியார் மயமாக்க திட்டமா...?

ரயில்வே உலகிலேயே மிகப்பெரிய ரயில் போக்குவரத்து வைத்துள்ள நாடுகளில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. ரயில்வே துறையில் 
கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் பல கோடிப்பேர் ரயிலில் பயணிக்கும் காரணத்தால் இந்திய பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கென தனிப் பட்ஜெட் அறிக்கை அறிவிக்கப்பட்டது.

Railway Budget...Plan to privatize
Author
Delhi, First Published Feb 1, 2020, 1:23 PM IST

ரயில்வே உலகிலேயே மிகப்பெரிய ரயில் போக்குவரத்து வைத்துள்ள நாடுகளில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. ரயில்வே துறையில் 
கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் பல கோடிப்பேர் ரயிலில் பயணிக்கும் காரணத்தால் இந்திய பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கென தனிப் பட்ஜெட் அறிக்கை அறிவிக்கப்பட்டது.

சுமார் 92 வருடம் இது நடைமுறையில் இருந்த நிலையில் 2017-18-ம் நிதியாண்டு பட்ஜெட்டின் போது ரயில்வே பட்ஜெட் அறிக்கையைப் பொதுப் பட்ஜெட் அறிக்கையுடன் இணைக்கப்பட்டது. இன்று முதல் இந்திய ரயில்வே துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துள்ளதாகச் சாமானிய மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், 2020 - 21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வாசித்து வருகிறார். 

ரயில்வே துறை தொடர்பான அறிவிப்புகள்;-

* 27 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலான ரயில் பாதைனள் மின்மயமாக்கப்படும். 

* சுற்றுலா தலங்களை இணைக்கும் தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும். 

* ரயில்வேக்கு சொந்தமான காலி இடங்களில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்படும். 

* போக்குவரத்து உட்கட்டமைப்புக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் 2024-க்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். 

* பெங்களூருவில் ரூ.18,600 கொடி செலவில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும். 

* தனியார் – அரசு பங்களிப்புடன் 150 புதிய ரயில்களை இயக்க முடிவு 

*  ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

*  2,000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

* போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு ரூ. 1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

*  எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ. 22,000 கோடி ஒதுக்கீடு

* நாடு முழுவதும் ஒரு லட்சம் கிராமங்கள் பாரத் நெட் திட்டம் மூலம் இணைக்கப்படும். 

* பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* 4 ரயில்நிலையங்கள் அரசு – தனியார் பங்களிப்புடன் மறு மேம்பாடு செய்யப்படும்.

* நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த 9,000 கி.மீ.க்கு பொருளாதார பாதை அமைக்கப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios