Asianet News TamilAsianet News Tamil

கரடியின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய பங்குவர்த்தகம்

indian share market down
indian share-market-down-5GCU9H
Author
First Published Mar 22, 2017, 6:41 PM IST


கரடியின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய பங்குவர்த்தகம்

வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான இன்று, இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவுற்றது .

அமெர்க்க அதிபர் டிரம்ப் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகைகளில் புதிய திருத்தங்கள் கொண்டு வந்ததையடுத்து, சர்வதேச சந்தை பாதித்தது .

டிரம்ப்பின் அதிரடி  முடிவால்,  ஆசிய மற்றும்  ஐரோப்பிய  பங்கு சந்தைகளில்  முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்தது. இதன் காரணமாக ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகளில் வர்த்தகம்  குறைந்தது. இதன் தாக்கம் இந்தியப்பங்கு சந்தையிலும் எதிரொலித்ததால், இந்திய வர்த்தகம் சரிவை சந்தித்தது .

தேசிய பங்கு சந்தை குறியீடு நிப்டி 91  புள்ளிகள்  குறைந்து  9030 புள்ளிகளிலும், மும்பை  பங்குச்சந்தை  குறியீடு சென்செக்ஸ் 317  புள்ளிகள்  குறைந்து 29,167  புள்ளிகளிலும் நிலைகொண்டது .

லாபம் கண்ட  நிறுவனங்கள் :

Lupin,hcl tech, cipla

இழப்பை  சந்தித்த நிறுவனங்கள் :

Bhartiartl, itc,tata motors

 

Follow Us:
Download App:
  • android
  • ios