Asianet News TamilAsianet News Tamil

மாதம் 41 ஆயிரம் முதல் 83 ஆயிரம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு சிக்கல்... வருமான வரி கட்டாமல் தப்பிப்பது எப்படி?

மத்திய அரசு வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம்வரை வருமானவரி விலக்கு அளித்து அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், முறையாக செயல்பட்டால் ஆண்டுக்கு 10 லட்சம் வருமானம் பெறுவோரும் வரி விலக்கிலிருந்து தப்பிக்கலாம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.    

How to Get tax exemption Up To rs 10 lakhs
Author
Tamil Nadu, First Published Feb 2, 2019, 5:49 PM IST

மத்திய அரசு வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம்வரை வருமானவரி விலக்கு அளித்து அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், முறையாக செயல்பட்டால் ஆண்டுக்கு 10 லட்சம் வருமானம் பெறுவோரும் வரி விலக்கிலிருந்து தப்பிக்கலாம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.    How to Get tax exemption Up To rs 10 lakhs

நிகர ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகர வருவாய் ரூ.5 லட்சத்தில் இருந்து கூடுதலாக 100 ரூபாய் உயர்ந்தாலும் ஆண்டுக்கு 13 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். 5 லட்சத்து 100 ரூபாய் முதல் 10 லட்சம் வருமானம் பெறுபவர்கள் வரை அதாவது மாதத்திற்கு 41 ஆயிரம் முதல் 83 ஆயிரம் சம்பளம் பெறுபவர்கள் வரை இந்த வரிவிலக்கிலிருந்து தப்ப முடியும் எனக் கூறுகிறார்கள். How to Get tax exemption Up To rs 10 lakhs

ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் சரியான முறையில் சேமித்தால் வரியும் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. இதனால் மாத வருமானம் ரூ.83 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்தாமல் தப்பிக்க முடியும். அதாவது 83 ஆயிரம் பெறும் ஒருவரின் வருமானத்தில் இருந்து ஆண்டுக்கு வீட்டுக்கடன் வட்டி ரூ.2 லட்சத்தை அதில் கழித்தால் வருமானம் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம். அடுத்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, பென்சன் திட்ட பிடித்தம், இன்ஸ்யூரன்ஸ், குழந்தைகள் படிப்பு செலவு மற்றும் நிரந்தர கழிவு போன்றவைகளுக்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கழித்து கொள்ளலாம்.How to Get tax exemption Up To rs 10 lakhs

தவிர 80டி பிரிவின் கீழ் 25 ஆயிரம் ரூபாய்க்கான மெடிக்கல் இன்சுரன்ஸ், 60 வயதை தாண்டிய பெற்றோருக்கான மருத்துவ செலவு ரூ.25 ஆயிரம் ஆகியவை வரிக்கழிவு பெறும். இதன்மூலம் வருமானம் ரூ.5 லட்சமாக கணக்கிட்டால் வரி செலுத்த வேண்டியதில்லை. நிகர வருமானம் ரூ.5 லட்சத்து 100 ஆக உயர்ந்தாலும் வரி ரூ.13 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த பட்ஜெட்டின் மூலம் சலுகை என்பது முறையாக திட்டமிட்டு செலவினங்களை கணக்கிட்டால் மட்டுமே கிடைக்கும்’’ என்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios