ADB bank : கொரோனாவில் பள்ளிகளை மூடியதால் இந்தியாவின் ஜிடிபி பெரிதாகச் சரியும்: ADB வங்கி அதிர்ச்சித் தகவல்

Asian Development Bank india: இந்தியாவில் கொரோனா காலத்தில் நீண்டகாலம் பள்ளிக்கூடங்களை திறக்காமல் இருந்ததால், குழந்தைகளின் கற்றல் திறனில் இழப்பு ஏற்பட்டது. இதனால் தெற்காசியாவில் அதிகமான ஜிடிபி இழப்பை சந்திக்கும் நாடாக இந்தியா இருக்கும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி(ஏடிபி) ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

Asian Development Bank india  : Indias GDP to take a big hit due to pandemic-linked learning losses for students: ADB study

இந்தியாவில் கொரோனா காலத்தில் நீண்டகாலம் பள்ளிக்கூடங்களை திறக்காமல் இருந்ததால், குழந்தைகளின் கற்றல் திறனில் இழப்பு ஏற்பட்டது. இதனால் தெற்காசியாவில் அதிகமான ஜிடிபி இழப்பை சந்திக்கும் நாடாக இந்தியா இருக்கும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி(ஏடிபி) ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கொரோனாவில் பள்ளிக்கூடங்களை மூடியதால் தொடர்பாக பொருளாதாரத்தில் ஏற்படும் முக்கியத் தாக்கம்” என்ற தலைப்பில் ஆசிய மேம்பாட்டு வங்கி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆய்வறிக்கையை ஸ்பென்சர் கோஹென், சுமதி சக்கரவர்த்தி, சிந்து பாரதி, பத்ரி நாராயணன், சின் யங் பார்க் ஆகியோர் செய்தனர். 

Asian Development Bank india  : Indias GDP to take a big hit due to pandemic-linked learning losses for students: ADB study

ஜிடிபி பாதிப்பு

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிக்கூடங்களை நீண்டகாலமாக மூடி  வைத்த நாடுகளில் ஆசியாவில் இந்தியா முதலிடம் பெறுகிறது. குழந்தைகளுக்கும், இளம்தலைமுறையினருக்கும் கல்விக் கற்றலில் ஏற்பட்ட பாதிப்பு, கற்றல் திறனில் ஏற்பட்ட பாதிப்பு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். 2023ம் ஆண்டில் 1050 கோடி டாலரும், 2030ம் ஆண்டு 9900 கோடி டாலரும் பாதிப்பு ஏற்படும். இது ஜிடிபியில் கணக்கிடும்3.19 சதவீதம் அடிவாங்கும். 

தேவை சரியும்

உலகளவில் கொரோனாவில் பள்ளிகள் மூடலால் குழந்தைகள் கல்வி கற்றலில் ஏற்பட்ட பாதிப்பால், 2030ம் ஆண்டு உலக ஜிடிபி 94300 கோடி டாலராகச் சரியும். அந்த நேரத்தில் இந்தியாவின் பங்கு மட்டும் 10 சதவீதம் இருக்கும். அதுமட்டுமல்லாமல் திறன்மிகு ஊழியர்கள், தொழிலாளர்கள் எண்ணிக்கையும் ஒரு சதவீதம் குறையும், கூலித்தொழிலாளர்களுக்கான தேவையிலும் 2 சதவீதம் 2030ம் ஆண்டில் சரியும் 

Asian Development Bank india  : Indias GDP to take a big hit due to pandemic-linked learning losses for students: ADB study

ஏழ்மை

இந்தியாவில் கிராமப்புறங்களில் இருந்து குறிப்பிடத்தகுந்த அளவு மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்விக்கு மாணவர்கள் செல்கிறார்கள். ஆனால் பெருந்தொற்றால்  பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால், அதன் பாதிப்பு அதிகமாக இருந்தது.
கிராமங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் இளைஞர்கள், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு இணையதளக் கல்வி கிடைக்காததால், அவர்களால் ஆன் லைன் வகுப்புகளில் பங்கேற்க இயலவி்ல்லை.

கற்றல் இழப்பும், ஊதியம் ஈட்டும் இழப்பும் முக்கியமானது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள், கூலி வேலைக்குத் திரும்பிவிடுவார்கள். இந்தியாவில் பெரும்பகுதி தொழிலாளர்கள் கூலிவேலைக்குச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆசிய மேம்பாட்டு வங்கியின் கணிப்பின்படி 40.84 கோடி மக்கள் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். திறன்மிகு தொழிலாளர்கள் எண்ணிக்கை7.26 கோடி பேர் மட்டுமே உள்ளனர்

மோசமான இழப்பு

இந்த பாதிப்புகளால் தெற்காசியாவில் அதிமான ஜிடிபி இழப்பைச் சந்திக்கும் நாடாக இ்ந்தியா வருங்காலத்தில் மாறும். 2030ம் ஆண்டில், 9884 கோடி டாலராக இந்தியாவின் ஜிடிபி சரியும். சதவீத அடிப்படையில் 2023ம் ஆண்டில் ஜிடிபி 0.34%, 2026ம் ஆண்டில் 1.36%, 2030ம் ஆண்டில் 3.19% சரியும். 

 பள்ளிகளை நீண்டகாலம் மூடியதன் தாக்கம் உலகளாவிய ஜிடிபி மற்றும் வேலைவாய்ப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உலகளவில் ஜிடிபி 2024ம் ஆண்டில் 0.19%, 2028ம் ஆண்டில் 0.64%, 2030ம் ஆண்டில் 1.11% சரியும். 

Asian Development Bank india  : Indias GDP to take a big hit due to pandemic-linked learning losses for students: ADB study

கல்வியில் முதலீடு

ஆசியப் பொருளாதாரத்தில் தொடக்கக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியில் இந்தியாவில்தான் அதிகமாக 25.57 கோடி குழந்தைகள் உள்ளனர்.  ஆதலால், கல்வி மற்றும் திறன்மேம்பாடு ஆகியவற்றில் மத்திய அரசு அதிகமான முதலீட்டை செலுத்தி டிஜிட்டல் இடைவெளிகளைக் குறைக்க வேண்டும். இந்திய அரசுக்கு உடனடியான சவால் என்பது பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் மதிப்பீடு செய்து அவர்கள் பாதிப்பிலிருந்து மீண்டுவரவும், இழந்தவாய்ப்புகளை வழங்கவும் உதவ வேண்டும்.

 கற்றல் இடைவெளி

அதுமட்டுமல்லாமல் கற்றலில் இருக்கும் இடைவெளியையும், குறிப்பிட்ட நபர்களுக்கான கற்றல் தேவையையும் அடையாளம் காணுதல் அவசியம். முறையான ஆதரவுடன் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் பாதி்க்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை உருவாக்கலாம். 

Asian Development Bank india  : Indias GDP to take a big hit due to pandemic-linked learning losses for students: ADB study

அதிக நிதி ஒதுக்கீடு

பள்ளிகளை மூடியதால், பாதிக்கப்பட்ட இளம் தலைமுறையினருக்கு உதவ அதிகமான நிதியை இந்திய அரசு ஒதுக்கவேண்டும்.  குறிப்பாக ஏழைகள், கிராமப்புறங்கள், பின்தங்கிய பகுதிகளில் இருப்போருக்கு அதிககவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக பள்ளி செல்லும் வயதில் இருக்கும் மாணவர்களுக்கு போதுமான நிதியுதவியும், ஊக்கத்தொகையும் வழங்கிட வேண்டும். கூடுதலாக திறன்மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கிட வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios