Asianet News TamilAsianet News Tamil

வருமான வரியை திரும்பப்பெற காத்திருக்கிறீர்களா..? கள்ள மவுனத்துடன் மொக்கை காரணம் சொல்லும் வருமான வரித்துறை..!

 ஜூன், ஜூலை மாதத்தில் இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களுக்குக் கூட வருமான வரித்துறை பணத்தை திருமத் தராமல் இழுத்தடித்து வருவது வரி செலுத்துவோரை கலக்கமடையச் செய்துள்ளது.
 

Are you waiting for the income tax refund ..? Income tax department says knee-jerk reason with false silence
Author
Bangalore, First Published Nov 28, 2020, 12:20 PM IST

ஜூன், ஜூலை மாதத்தில் இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களுக்குக் கூட வருமான வரித்துறை பணத்தை திருமத் தராமல் இழுத்தடித்து வருவது வரி செலுத்துவோரை கலக்கமடையச் செய்துள்ளது.

இதுகுறித்து யாரிடம் கேட்பது? அல்லது தாக்கல் செய்யும்போது ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருக்குமா? என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்து வருகிறது.  ஆனால், வருமான வரித்துறை தரப்பில் இதுகுறித்து எந்த ஒரு விளக்கமோ, அல்லது அறிவிப்போ வெளியாகவில்லை. இதுகுறித்து வரியை தாக்கல் செய்தவர்கள் வருமான வரித்துறை ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Are you waiting for the income tax refund ..? Income tax department says knee-jerk reason with false silence

ஐ.டி.ஆர்களை விரைவாக செயலாக்குவதற்கான தொழில்நுட்ப மேம்படுத்தல் தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. 2020-21 க்கு உங்கள் வருமான வரி அறிக்கையை (ITR)தாக்கல் செய்திருந்தால், இதுவரை பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், உங்களுக்கு மட்டும் கிடைக்காமல் போகவில்லை. தாக்கல் செய்த எவருக்குமே அந்தப்பணம் கொடுக்கப்படவில்லை. இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள வருமான வரித்துறை தொழில்நுட்பத்தை மேம்படுத்திவருவதாக் தாமதம் ஏற்படுவதாக மொக்கை காரணத்தை கூறி இருக்கிறது. 

“மேம்பட்ட வரி செலுத்துவோர் சேவைகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ஐடிஆர்களை விரைவாக செயலாக்குவதற்காக புதிய, தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட தளத்திற்கு (சிபிசி 2.0) நகர்கிறோம். 2020-21 க்கான ஐடிஆர்கள் CPC 2.0 இல் செயலாக்கப்படும். நாங்கள் புதிய முறைக்கு இடம்பெயரும் நடவடிக்கையில் இருக்கிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி" எனக் கூறப்பட்டுள்ளது. Are you waiting for the income tax refund ..? Income tax department says knee-jerk reason with false silence

சிபிசி 2.0 க்கு எப்போது இடம்பெயரும்? 20-21 ம் ஆண்டுக்கான வருமானவரிப்பிடித்தம் எப்போது திருப்பித் தரப்படும்? என எந்த காலக்கெடுவும் அதில் கொடுக்கப்படவில்லை. சிபிசி 2.0 திட்டத்தின் கீழ், வரித் துறை அதன் திறனை விரிவுபடுத்துகிறது மற்றும் வரி செலுத்துவோருக்கு முன் நிரப்பப்பட்ட படிவங்கள் மூலம் சிறந்த சேவைகளை வழங்க தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறது. பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நேரத்தைக் குறைக்கிறது. ஆனால் இப்போது பல மாதங்கள் ஆகியும் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதாக காரணம் கூறுவது ஏற்புடையதாக அல்ல.

இதுகுறித்து சார்டடு அக்கவுண்ட் ஒருவரிடம் கேட்டபோது, ‘’எங்களது வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் FY19-20 அல்லது AY20-21 க்கான பணத்தைத் திரும்பப் பெறவில்லை. 3-4 மாதங்களுக்கு முன்னதாக FY2019-20 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்த எனது வாடிக்கையாளர்களில் பலர் இன்னும் பணத்தைத் திரும்பப் பெறவில்லை" என்றார்.

 Are you waiting for the income tax refund ..? Income tax department says knee-jerk reason with false silence

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் இணையதளமான டாக்ஸ்பன்னர்.காமின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர்  கூறுகையில், ‘’2019-20 நிதியாண்டிற்கான பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் இருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்த வாடிக்கையாளர்கள் கூட இன்னும் பணத்தைத் திரும்பப் பெறவில்லை. பொதுவாக, வரி திருப்பிச் செலுத்துதல் 2-4 மாத காலப்பகுதியில் வழங்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

வருமான வரித்துறையின் சமீபத்திய ட்வீட்டில், ’’ஐ-டி துறை 2020 ஏப்ரல் 1 முதல் 2020 நவம்பர் 17 வரை 40.19 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் இதுவரை ரூ. 3 கோடியே 6 1 லட்சத்து 36,066 வழங்கியுள்ளது என்று கூறியுள்ளது.

 Are you waiting for the income tax refund ..? Income tax department says knee-jerk reason with false silence

தாமதத்திற்கு காரணம் கோவிட் நோய்த்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகள், செல்வுகளால் வருமான வரித்துறையின் திரும்பத்தரும் வரியை எடுத்து மத்திய அரசு செலவு செய்து கஜானாவை காலி செய்து விட்டது. பொதுவாக, வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்த 3-4 மாதங்களுக்குள் அவை பெறப்படும். ஆனான் கோவிட் -19 நெருக்கடி காரணமாக கூடுதல் செலவினம் அதிகரித்து மத்திய அரசு பணப்புழக்க நெருக்கடி இருப்பதை இந்த ஆண்டு நாங்கள் புரிந்துகொள்கிறோம். இது தாமதத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இப்போது, ​​பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து, ஜிஎஸ்டி வசூலும் வலுவாகி வருவதால், சிபிடிடி ரூ .1 லட்சத்திற்கும் குறைவான பணத்தைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிட வேண்டும் ”என்று வரி ஆலோசனை ஆலோசகர் விவேக் ஜலன் தெரிவித்துள்ளார். 

எது எவ்வாறு இருப்பினும் இந்த விவகாரத்தில் வரித் துறை வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது. காரணத்தை வெளிப்படையாகவும், காலக்கெடு எப்போது என்பதையும் வருமான வரித்துறை மேலும் தாமதமின்றி அறிவிக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios