டீனேஜ் மாணவனுடன் பள்ளிக்குள் உறவு.. அதற்கு காவலுக்கு நிறுத்தப்பட சக மாணவர்கள் - போலீசில் சிக்கிய ஆசிரியை!

By Ansgar R  |  First Published Jan 11, 2024, 7:51 PM IST

Teacher Arrested for Having Sex with Teenager : அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர் பள்ளிக்குள் ஒரு டீனேஜ் மாணவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக இருந்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் மிசௌரியில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர், பள்ளி மைதானத்தில் இளம் மாணவர் ஒருவருடன் உடலுறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மற்ற மாணவர்களை யாரும் அந்த இடத்தருகில் வராமல் பார்த்துக்கொள்ள காவலுக்கு நிறுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் அளித்த தகவலில் தெரியவந்துள்ளது. 

மிசௌரி புலாஸ்கி கவுண்டியில் உள்ள Laquey உயர்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியரான Hailey Clifton-Carmack, ஒரு பதின்வயது மாணவனின் நலனுக்கு ஆபத்தை விளைவித்தல், கற்பழிப்பு, மாணவருடன் பாலியல் தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த ஜனவரி 5 அன்று கைது செய்யப்பட்டார். டெக்சாஸில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை மிசோரிக்கு நாடு கடத்தும் பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

மாலத்தீவு எப்படி சர்வதேச சுற்றுலா பயணிகளின் ஃபேவரைட் ஸ்பாட்டாக மாறியது? இவை தான் முக்கிய காரணங்கள்..

அந்த ஆசிரியையின் இந்த விஷயத்தை குறித்து ஒரு மாணவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு தான் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அந்த ஆசிரியையுடன் உறவில் ஈடுபட்ட 16 வயது மாணவர், தனது முதுகில் கீறல்கள் உள்ளதை காட்டியதாகக் கூறப்படுகிறது, அது திருமதி கிளிஃப்டன்-கார்மாக்குடனான தொடர்பில் இருந்தபோது ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் அந்த ஆசிரியை எப்போதும் "மாணவர்களுடன் மிகவும் நெருக்கமாக" இருப்பார் என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர். 

மேலும், டிசம்பரில் ஆசிரியரின் தொலைபேசியை சரிபார்க்க அதிகாரிகள் வாரண்ட் பெற்றனர். திருமதி. கிளிஃப்டன்-கார்மாக் "எந்த பிரச்சனையும் இல்லாமல் தனது தொலைபேசியை ஒப்படைத்தார் மற்றும் எந்த தவறும் தான் செய்யவில்லை என்றும் மறுத்துள்ளார். எவ்வாறாயினும், திருமதி கிளிஃப்டன்-கார்மேக்கர் போனில் உள்ள தரவுகளை சரிபார்க்க போலீசார் விரும்பியபோது அவரது வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் தனது கடவுச்சொல்லை அவர் வழங்க மறுத்துவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆனால் அதிகாரிகள் மின்னணு கண்காணிப்பு அமைப்பை பயன்படுத்தி அவரது போனை ஆராய்ந்தபோது, அதில் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் திருமதி கிளிஃப்டன்-கார்மாக் இடையே அவர்களின் உறவைப் பற்றி விவாதித்த செய்திகளை கண்டுள்ளனர். இந்நிலையில் அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது. 

அரச குடும்பத்தை சாராத காதல் மனைவியை கரம் பிடிக்கும் புருனே இளவரசர்!

click me!