இளம் பெண்கள் தனக்கு பிடித்த பெண்களுடன் உடலுறவு கொள்ளும் அதிர்ச்சி...!! இளைஞர்கள் மத்தியில் பரவும் புதிய கலாச்சாரம்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2019, 4:12 PM IST
Highlights

"கில் தா கேஸ்" எனும் பெயரில்  ஒரே பாலினத்தவர் உடல் உறவு கொள்வது அங்கு ஒரு இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்டுவருகிறது.  இதனால் பெருமளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதுடன், பாலியல் நோய்தொற்றும் அதிகரித்து வருகிறது.  இது ஒரு ஒழுக்க சீர்கேடான நிலைக்கு உகாண்டாவை இட்டுச்செல்கிறது  என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குரல் எழுப்பிவருகின்றனர்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், அதற்கான சட்ட மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் உள்ளது என்றும் உகாண்டா அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பல்வேறு  நாடுகள் ஓரினச்சேர்க்கையை அனுமதித்து வரும் நிலையில்,  பல நாடுகள் அதை கடுமையாக எதிர்த்து வருகின்றன, அதை தண்டனைக்குரிய குற்றமாக கருதி அதில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது இயற்கைக்கு முரணான  உறவு என்பதுடன் மனித சமூகத்திற்கு  ஒழுக்கக்கேடு என்பதும் அந்நாடுகள் இதற்குச்  சொல்லும் காரணம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உகாண்டா நாட்டில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட்டுவந்த மரணதண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு  நீக்கப்பட்டது.

 

இந்நிலையில்  "கில் தா கேஸ்" எனும் பெயரில்  ஒரே பாலினத்தவர் உடல் உறவு கொள்வது அங்கு ஒரு இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்டுவருகிறது.  இதனால் பெருமளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதுடன், பாலியல் நோய்தொற்றும் அதிகரித்து வருகிறது.  இது ஒரு ஒழுக்க சீர்கேடான நிலைக்கு உகாண்டாவை இட்டுச்செல்கிறது  என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குரல் எழுப்பிவருகின்றனர். இதனால் இப்புதுவகையான இக்கலாச்சாரத்தை முற்றிலுமாக தடுக்க அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில்  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உகாண்டாவின் நீதிநெறி மற்றும் ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் சைமன்  லோகோடோ, தற்போதைய தண்டனை சட்டம் சில குறிப்பிட்ட வரையறைகளுக்கு  உட்பட்டது என்றும்,  ஓரினச்சேர்க்கை ஒரு குற்றம் என்ற நிலையிலேயே சட்டம் கருதுகிறதே  ஒழிய,  இதற்கு கடுமையான தண்டனை வழங்கிட சட்டத்தில்  இடம் இல்லை.   

இந்நிலையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதனை ஊக்குவிப்பவர்கள் மீது கடுமையாட தண்டனை வழங்கும் வகையில்  சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.  ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோர்  மற்றும் அதற்கு ஆட்கள் எடுத்து செயல்படுத்துவதை  கடுமையான குற்றமாக கருதி அவருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டம் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!