இது அடுத்த லெவல்..! டிரம்ப்-மோடி சந்திக்க அதிக வாய்ப்பு..!

By ezhil mozhiFirst Published Jun 18, 2019, 6:44 PM IST
Highlights

ஜப்பானின் ஒசாகாவில் வரும் 28 மற்றும் 29ம் தேதி ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் சந்தித்து, வர்த்தக விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது அடுத்த லெவல்..!  டிரம்ப்-மோடி சந்திக்க அதிக வாய்ப்பு..! 

ஜப்பானின் ஒசாகாவில் வரும் 28 மற்றும் 29ம் தேதி ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் சந்தித்து, வர்த்தக விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேச வாய்ப்பு  உள்ளதகாவும், இது தவிர இந்தியா,அமெரிக்கா, ஜப்பான் நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையும் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மோடி டிரம்ப் சந்திப்பு  இரு நாடுகளுக்கு இடையே நல்ல வர்த்தக உறவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மோடி இரண்டாவது  முறையாக பிரதமராக பதவியேற்று, நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பல முக்கிய திட்டங்களை செய்லபடுத்த மும்முரம் காட்டி வருகிறார். அந்த வகையில், டிரம்ப் மற்றும் மோடியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருத்துக்கள் வெளியாகி உள்ளது. 

click me!