கொரோனாவால் கோமாவுக்கு சென்ற பெண்.. வயகராவால் எழுந்து உட்கார்ந்த அதிசயம்.. பிரிட்டனில் மெடிக்கில் மிராகிள்.!

By Asianet Tamil  |  First Published Jan 5, 2022, 9:34 PM IST

கோமாவில் இருந்து மோனிகாவை மீட்பதற்காக மருத்துவர்கள் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்தனர். அதன்படி, செக்ஸ் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் வயகரா மாத்திரையை மோனிகா அல்மெய்தாவுக்கு தொடர்ந்து கொடுக்கத் தொடங்கினர்.


பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கோமாவுக்கு சென்ற பெண்ணை வயகரா மருந்தைக் கொடுத்து மீட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். 

கொரோனா தொற்று 2020-ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்தே, அது ஏற்படுத்தும் தாக்கத்தை உலக நாடுகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, ஐசியூ சிகிச்சைக்கு செல்பவர்கள், உயிர் பிழைப்பார்களா என்ற பயம் உறவினர்களையும் நண்பர்களையும் தொற்றிக்கொள்ளும். இந்நிலையில் பிரிட்டனின் கொரோனாவால் கோமாவுக்கு சென்ற பெண், அதிலிருந்து மீண்டு ஆச்சரியம் மூட்டியிருக்கிறார். பிரிட்டனில் லிங்கன்ஷயர் பகுதியைச் சேர்ந்தவர் மோனிகா அல்மெய்தா. 37 வயதான இவர், மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

 

கொரோனா தடுப்பூசி பிரிட்டனில் செலுத்த தொடங்கிய உடனே 2 தவணை கொரோனா தடுப்பூசிகளை மோனிகா செலுத்திக்கொண்டார். என்றாலும் பிரிட்டனில் கொரோனா அலை மாறி மாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா பரவலுக்கு மோனிகா அல்மெய்தாவும் ஒரு மாதத்துக்கு முன்பு பாதிப்புக்கு உள்ளானார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். கடந்த ஒரு மாதமாக தீவிர சுவாச பிரச்னையும் ஏற்பட்டதால், கோமா நிலையிலேயே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கோமாவில் இருந்து மோனிகாவை மீட்பதற்காக மருத்துவர்கள் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்தனர். அதன்படி, செக்ஸ் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் வயகரா மாத்திரையை மோனிகா அல்மெய்தாவுக்கு தொடர்ந்து கொடுக்கத் தொடங்கினர். வயகரா மருந்து என்பது ரத்த ஓட்டத்தை வேகமாக்கும் என்பதால், கோமாலிருந்து மீள அது உதவும் என்ற நம்பிக்கையில் இந்த மருந்து கொடுக்கப்பட்டது. அது அவருக்கு பலனை கொடுத்திருக்கிறது. கோமாவிலிருந்து மெதுவாக மீள தொடங்கிய மோனிகா கோமாவில் இருந்து முழுமையாக மீண்டிருக்கிறார். இந்த மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வயாகரா மருந்தை நோயாளிகளுக்குக் கொடுத்தால் அதனால் பலன் கிடைக்குமா என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். எது எப்படியோ கொரோனாவால் கோமாவுக்கு சென்றவர், வயகராவால் மீண்டிருப்பது மெடிக்கில் மிராக்கிள்தான்!

click me!