ஹோட்டலில் விபச்சாரம்.. கமிஷனுக்காக காத்திருந்த ஊழியர்.. நேக்காக தூக்கிய சிங்கப்பூர் போலீஸ் - என்ன தண்டனை?

By Ansgar R  |  First Published Dec 18, 2023, 2:25 PM IST

Singapore Hotel : சிங்கப்பூரில் இன்று டிசம்பர் 18, 2023 அன்று, பீச் ரோடு ஹோட்டலில் பாலியல் தொழிலாளிகளை, விபச்சாரம் செய்ய அனுமதித்ததற்காக வரவேற்பாளர் மற்றும் அவரது முதலாளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


கடந்த டிசம்பர் 15, 2023 அன்று வெளியான காவல்துறையின் செய்திக்குறிப்பின்படி, சிங்கப்பூரில் உள்ள லயன் பீக் ஹோட்டல் புகிஸில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி மற்றும் ஏப்ரல் 26ம் தேதி, 2023 ஆகிய தேதிகளில் மத்திய காவல் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பாலியல் சேவைகளை வழங்குவதற்கான வேலைகளை செய்துகொண்டிருந்த எட்டு தொழிலாளர்களை அவர்கள் கைது செய்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மேலதிக விசாரணைகளில், அந்த ஹோட்டலில் வரவேற்பாளர் பணியில் இருந்த 36 வயதுடைய பெண்ணான டோ தி டுயெட் நுங், தான் அந்த ஹோட்டலில் கமிசன் வாங்கிக்கொண்டு அவர்களின் செயல்பாடுகளை அனுமதித்துள்ளார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா.. வாஷிங்டனில் கார் பேரணி நடத்தி கொண்டாடிய இந்துக்கள்.. 

சிங்கப்பூரின் முன்னணி ஊடகம் ஒன்று அளித்த தகவலின்படி, இன்று டிசம்பர் 18, 2023 அன்று அந்த 36 வயது வரவேற்பாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பெண்கள் சாசனத்தின் கீழ் ஒரு பாலியல் தொழிலாளியின் வருவாயில் ஒரு பகுதியை பெற்றது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. ஏப்ரல் 20 மற்றும் ஏப். 23, 2023 க்கு இடையில் மூன்று பாலியல் தொழிலாளிகளிடமிருந்து அவர் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. 

மேலும் அந்த பெண்ணின் முதலாளி, 51 வயதான Michael Tay Fook Meng மீதும் ஹோட்டல் உரிம விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஹோட்டல் சட்டத்தின் கீழ், பாலியல் தொழிலாளர்களை ஹோட்டலில் அறைகளை ஆக்கிரமிக்க அனுமதிக்கும் நபரை வேலைக்கு அமர்த்துவதற்கு உரிமம் பெற்றவர் தான் பொறுப்பு.

குவைத் மன்னர் அமீர் ஷேக் நவாப் மறைவு - இரங்கல் நிகழ்வில் பங்கேற்றார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி!

என்ன தண்டனை ?

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஹோட்டல் உரிமம் பெற்றவர் S$1,000க்கு (63000 ரூபாய்) மிகாமல் அபராதத்தை எதிர்கொள்ள நேரிடலாம். ஒரு விபச்சாரம் செய்யும் பெண்களிடம் இருந்து பணம் பெற்றது மற்றும் 3 பிற குற்றங்களுக்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக S$100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!